»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

அழகிருந்தும், நடிப்புத் திறனிருந்தும் சினிமாவில் காலுன்ற முடியாமல் போன பலரில் ஒருவர்காயத்ரி ரகுராம்.

டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகள் என்பதால் ஈஸியாக சினிமாவில் நுழைந்தார். சார்லி சாப்ளின்படத்தில் கண் குளிர கவர்ச்சியும் காட்டினார். நின்றபடியே பிரபதேவாயின் தோளில் காலை போட்டுக்காட்டினார்.

ஆனால், தொடர்ந்து சினிமாவில் தாக்குப்பிடிக்கத் தான் முடியாமல் போய்விட்டது. சினிமாவில்முக்கிய குடும்பத்தைச் சேர்ந்த இவரிடம் தங்களது லீலைகளைக் காட்ட முடியாது என்பதால் இளம்நாயகர்கள் எல்லாம் காயத்ரியை அவாய்ட் செய்துவிட்டனர்.

விளைவு, தனுசுடன் நடிக்கப் போகும் ஒரு படத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அந்தப் படத்தைஇயக்கப் போவது தனுசின் அண்ணன் செல்வராகவன். தனுசோடு ஜோடி என்றதும் சாபபிடாமல்இருந்து உடல் எடையையும் குறைத்தார் காயத்ரி.

ஆனால், இப்போது சோனியா அகர்வாலிடம் மாட்டிக் கொண்டுள்ள செல்வராகவனுக்கும்தனுசுக்கும் அண்டர்ஸ்டான்டிங் இல்லை.

மேலும் கால்ஷீட் சிக்கலில் இருக்கும் தனுஷ், மற்றபடங்களை எல்லாம் முடித்துவிட்டு, இந்தப் படத்தில் நடிக்க இன்னும் குறைந்தது ஒன்றரைவருடமாவது ஆகுமாம்.

இதனால் இந்தப் படம் தயாராகுமா என்ற சந்தேகம் காயத்ரிக்கு வந்துவிட்டது என்கிறார்கள்.

அப்படியே ஒன்றரை வருடம் கழித்து படத்தை எடுத்தாலும் அப்போதைய டிரெண்டுக்கு ஏற்றமாதிரி யாராவது ஒரு புது ஹீரோயினை புக் செய்து தன்னை வெட்டிவிட்டு விடுவார்கள் என்றுதீவிரமாக நம்பும் காயத்ரி, இப்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.

தன் தந்தையைப் போலவே நடன மாஸ்டராகிவிடலாம் என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டாராம்.

மிக நல்ல டான்சராக காயத்ரியால் நிச்சயம் கோரியாகிராபியில் கலக்க முடியும் என்கிறதுகோடம்பாக்கம். புலியூர் சரோஜா, கலா, பிருந்தா என தமிழ் சினிமாவுக்கு பெண் நடன மாஸ்டர்கள்புதிதல்ல என்பது முக்கிய விஷயம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil