»   »  ஸ்ரீகாந்த்க்கு நான் அக்கா அல்ல: கீதா

ஸ்ரீகாந்த்க்கு நான் அக்கா அல்ல: கீதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் ஸ்ரீகாந்த்துக்கும் எனக்கும் எந்த உறவும், தொடர்பும் இல்லை. வந்தனா கூறுவது போல அவர் எனது தம்பியும் அல்ல என்று ஸ்ரீகாந்த்-வந்தனா விவகாரத்தில் அடிபடும் கீதா கூறியுள்ளார்.

ஸ்ரீகாந்த்துக்கும், வந்தனாவுக்கும் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் வைத்துத் திருமணம் நடத்தியவர் ஸ்ரீகாந்த்துக்கு அக்கா முறை வரும் கீதாதான் என்று வந்தனா கூறியுள்ளார். இப்போது தங்களை ஒன்று சேர விடாமல் தடுத்து வருபவரும் கீதாதான் என்றும் வந்தனா குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை கீதா தற்போது மறுத்துள்ளார். இதுதொடர்பாக கீதா கூறுகையில், ஸ்ரீகாந்த்த்தின் சகோதரி கீதா தான் எங்களுக்கு திருமணம் செய்து வைத்தார் என்றும், ஸ்ரீகாந்த் நடிக்கும் ம் படம் தயாரிப்பதற்கு ரூ.10 லட்சம் கேட்டு தன்னையும் தன் குடும்பத்தினரையும் மிரட்டியதாக வந்தனா பேட்டி அளித்துள்ளார்.

வந்தனா கூறியதை பத்திரிக்கைகளும் அப்படியே செய்தியாக போட்டுள்ளன. உண்மையில், ஸ்ரீகாந்துக்கு எந்த வகையிலும் நான் உறவு முறை கிடையாது.

அவர் நடிக்கும் படத்திற்காக ரூ.10 லட்சம் கேட்டு நான் வந்தனா குடும்பத்தினரை மிரட்டுவதாக கூறுவது அபாண்டமான பொய். எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தம் கிடையாது என்ற பின் எதற்கு நான் யாரையும் மிரட்ட வேண்டும்?. நான் என்ன அவருக்கு அடியாளா?

நான் கண்ணியமான குடும்பத்தில் பிறந்தவள். நேர்மையாகவும், களங்கமற்றவளாகவும் வாழ வேண்டும் என்ற குறிக்கோளை கடைபிடித்து வருகிறேன்.

என் மீது சுமத்தப்பட்ட அபாண்ட சொற்களுக்கு நான் சட்டப்படி பதில் கூறுவேன். மேலும் எனக்கும் ஸ்ரீகாந்துக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது, நான் அவருக்கு சகோதரியும் கிடையாது என்று கூறியுள்ளார் கீதா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil