»   »  'அந்தக் கால சாக்லேட் பாய்..!' - ஜெமினி கணேசன் பிறந்ததின பகிர்வு

'அந்தக் கால சாக்லேட் பாய்..!' - ஜெமினி கணேசன் பிறந்ததின பகிர்வு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : எம்.ஜி.ஆர், சிவாஜி என இரு பெரும் கலைஞர்கள் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருந்த காலகட்டத்தில் தனக்கென முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றிபெற்றவர் ஜெமினி கணேசன்.

தனது அழகாலும், யதார்த்த நடிப்பாலும் பெண்களின் மனம் கவர்ந்த நாயகனாக இருந்த ஜெமினி கணேசன் 'காதல் மன்னன்' என அழைக்கப்பட்டார். இப்போதைய 'அலைபாயுதே' வசனம் போல அப்போதே காதல் மன்னனின் வசனங்கள் பிரபலம்.

'மனம்போல மாங்கல்யம்', 'இரு கோடுகள்', 'வஞ்சிக்கோட்டை வாலிபன்', 'பார்திபன் கனவு', 'களத்தூர் கண்ணம்மா', 'கற்பகம்', 'புன்னகை', 'பாசமலர்' போன்ற திரைப்படங்கள் இவரது அசாத்திய நடிப்பில் வெளிவந்து இன்றும் இவர் நடிப்புக்கு உதாரணம் சொல்ல வல்லன.

பல துறைகளில்

பல துறைகளில்

புதுக்கோட்டையில் பிறந்த ஜெமினி கணேசன் சென்னையில் படிக்கும்போது பேச்சு, பாடல், விளையாட்டு என பல துறைகளிலும் தனது திறமையைக் காட்டியிருக்கிறார். படித்து முடித்தபின் தான் படித்த சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலேயே ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். பிறகு சினிமா பக்கம் நாட்டம் ஏற்பட, ஜெமினி பட நிறுவனத்தில் மேனேஜராகச் சேர்ந்திருக்கிறார்.

ஜெமினி கணேசன்

ஜெமினி கணேசன்

1947-ம் ஆண்டு, தான் பணிபுரியும் ஜெமினி நிறுவன தயாரிப்பில் ‘மிஸ் மாலினி' என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து, ஜெமினி பட நிறுவனங்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த அவருக்கு, 1952-ம் ஆண்டு வெளிவந்த ‘தாய் உள்ளம்' என்ற திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜெமினி நிறுவனத்தில் வேலை பார்த்ததால் ஏற்பட்ட அடையாளப் பெயர் பின்னாளில் அப்படியே நிலைத்துவிட்டது.

கதாநாயகன்

கதாநாயகன்

வில்லனாக நடித்த அடுத்த ஆண்டே, ‘பெண்' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக வேடம் ஏற்று நடித்தார் ஜெமினி. 1953-ல் வெளியிடப்பட்ட 'பெண்', எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்றாலும், அதே ஆண்டில் வெளியிடப்பட்ட ‘மனம்போல மாங்கல்யம்' என்ற திரைப்படத்தில், அவர் இரட்டை வேடம் ஏற்று நடித்தார். இந்தப் படம், மாபெரும் வெற்றி பெற்று ஜெமினி கணேசனின் திரைவாழ்க்கையில் அடுத்த படிக்கட்டாக அமைந்தது.

சாவித்திரி

சாவித்திரி

'மனம்போல மாங்கல்யம்' படத்தில் ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக நடித்தவர் 'நடிகையர் திலகம்' சாவித்திரி. அவரையே பின்னாளில் ஜெமினி கணேசன் மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார். இப்படி, 'மனம்போல மாங்கல்யம்' படம் அவரது சினிமா வாழ்க்கையில் மட்டுமல்லாது சொந்த வாழ்விலும் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பிறகு, தனது படங்களில் ஏற்ற கதாபாத்திரங்களின் மூலம் 'காதல் மன்னன்' எனக் கொண்டாடப்பட்டார் ஜெமினி.

குணச்சித்திர நடிப்பு

1970-ம் ஆண்டு வெளிவந்த ‘லலிதா' என்ற திரைப்படமே ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்த கடைசிப் படமாக அமைந்தது. அதன் பிறகு, தனது இறுதிக்காலம் வரை பிற நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். கமல்ஹாசன், சிரஞ்சீவி, சத்யராஜ், விக்ரம், கார்த்திக் போன்ற பல நடிகர்களுடன் கேரக்டர் ரோல்களில் நடித்திருக்கிறார்.

200 திரைப்படங்களுக்கும் மேல்

200 திரைப்படங்களுக்கும் மேல்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பிற மொழிகளிலும் நடித்திருக்கிறார் காதல் மன்னன். 200 படங்களுக்கும் மேல் நடித்து அந்தக்கால ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர் ஜெமினி. இவரது நடிப்புத் திறமைக்கு மரியாதை செய்யும் விதமாக தமிழக அரசு கலைமாமணி உள்ளிட்ட விருதுகளையும், மத்திய அரசு 'பத்மஶ்ரீ' விருதையும் அளித்து கௌரவப்படுத்திருக்கிறது.

English summary
'Kaadhal Mannan' Gemini Ganesan has reached a peak at the period of two great artists were acting in Tamil cinema. Gemini Ganesan's birthday is today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil