»   »  ஜெனீலியாவின் முதல் காதல்!

ஜெனீலியாவின் முதல் காதல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil


எனக்கும் காதல் வந்தது. ஆனால் அது கலைந்து போய் விட்டது. அதனால் ஏற்பட்ட இதய வலியால் நான் துவண்டு போய் விடவில்லை. மாறாக புத்துயிர்ப்புடன் எனது தொழிலில் நான் முன்னேறியுள்ளேன் என்று மனம் திறந்து கூறியுள்ளார் 'பாய்ஸ்' ஜெனீலியா.


ஹரிணியாக பாய்ஸில் அறிமுகமாகி, சிக்கென்ற உடையில் வலம் வந்து, ரசிகர்களின் உள்ளங்களில் உட்கார முயற்சித்தார் ஜெனீலியா. ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு ஜெனீலியாவின் சிக் பிடிக்கவில்லை. இதனால் மனங்களில் இடம் கிடைக்காமல் ஏமாற்றத்துக்கு ஆளானார்.

ஆனால் தெலுங்கு அவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்தது. இதனால் தமிழை விட்டு விட்டு தெலுங்குக்குப் போனார். அவ்வப்போது தமிழ் பக்கமும் எட்டிப் பார்த்தார். இருந்தாலும் தேறவில்லை.

தமிழில் ஜெனீலியாவுக்கு படங்கள் இல்லை என்றாலும் கூட வதந்திகளுக்குப் பஞ்சமே இல்லாமல் படு பிசியாகவே இருக்கிறார் ஜெனீலியா. அவரையும் பரத்தையும் இணைத்து ரொம்ப நாட்களாகவே வதந்தி இருக்கிறது.

இருவரும் சேர்ந்து வாழ்வதாகக் கூட செய்திகள் உலவுகின்றன. ஆனால் இதுகுறித்து இருவருமே சீரியஸாக மறுக்கவில்லை, எதையும் விளக்கவும் இல்லை.

இந்த நிலையில் முதல் முறையாக மனம் திறந்து சில விஷயங்களை விளக்கியுள்ளார் ஜெனீலியா.

அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், பரத் எனக்கு மிக மிக நெருங்கிய நண்பர். எனது குடும்பமும், அவரது குடும்பமும் கூட நெருக்கமானவர்கள்தான். இரு குடும்பத்தினரும் வீட்டு நிகழ்ச்சிகளில் பரஸ்ரம் கலந்து கொள்வது வழக்கம்.

ஆனால் நான் ஒருபோதும் பரத்துடன் தங்கியதில்லை, குடித்தனமும் நடத்தியதில்லை. இதெல்லாம் பொய்யான தகவல்கள். இப்படியெல்லாமா செய்தி வெளியிடுவார்கள்.

என் வயதையொத்த பெண்களுக்கு காதல் வருவது சாதாரண விஷயம். எனக்கும் முன்பு காதல் வந்தது. ஆனால் இப்போது இல்லை. முதல் காதல் தோல்வியால் எனக்கும் எல்லோரையும் போலவே இதயத்தில் வலி வந்தது. ஆனால் அந்த வலியால் நான் துவண்டு போகவில்லை. மாறாக, எனது கேரியரில் முன்னேற அது உறுதுணையாக இருந்தது என்றார் ஜெனீலியா.

இப்போது ஜெனீலியா தமிழில் 3, தெலுங்கில் 3 படங்களில் நடித்து வருகிறார். இந்தியில், ஆமிர்கானுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

Read more about: boys director shankhar genelia

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil