வெளியே போ..ஜெயம் ரவியை கடுமையாக திட்டிய அப்பா..கேள்வி கேட்டால் இப்படியா?

சென்னை: 500 கோடி இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கிறது பொன்னியின் செல்வன் திரைப்படம்.

மூன்று ஆண்டுகளாக உருவான இந்தப் படம் அதன் பட்ஜெட்டை ஒரே வாரத்தில் எடுத்துள்ளது மிகப்பெரிய சாதனை.

இந்நிலையில் பொன்னியின் செல்வனாக நடித்த நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய ரசிகர்களுடன் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார்.

250 கோடிகள்

250 கோடிகள்

250 கோடி பட்ஜெட்டில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களுடைய படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில் அந்தப் படத்தினுடைய மொத்த பட்ஜெட்டையும் தாண்டி 300 கோடிகளை ஒரே வாரத்தில் சம்பாதித்தது படக்குழுவினரே எதிர்பாராத ஒன்று.

சந்தோஷ் சுப்ரமணியம்

சந்தோஷ் சுப்ரமணியம்

ஜெயம் ரவி ஒரு வெற்றிகரமான நடிகராக வருவதற்கு அவரது தந்தையும் அண்ணனும் தான் முக்கிய காரணம் என்றே சொல்லலாம். ஆரம்ப காலகட்டத்தில் தெலுங்கில் வெற்றி பெற்ற திரைப்படங்களின் உரிமைகளை வாங்கி தமிழிலும் வெற்றிப் படங்கள் ஆக்கினார். அந்த வகையில் ஜெயம் ரவியின் கரியரில் ஒரு முக்கியமான திரைப்படம் சந்தோஷ் சுப்பிரமணியம். நடிகர்கள் சித்தார்த், பிரகாஷ்ராஜ், நடிகை ஜெனிலியா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த பொம்மரில்லு என்கிற பெயரில் உருவான தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்தான் சந்தோஷ் சுப்பிரமணியம். பொம்மரில்லு திரைப்படத்தின் இயக்குநர் பாஸ்கர் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளைமாக்ஸ்

கிளைமாக்ஸ்

இந்தப் படத்தில் இருந்த அனைத்து காட்சிகளுமே மக்களால் ரசிக்கப்பட்டவை. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் ஜெயம் ரவி சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். படப்பிடிப்பின் போது அவர் பேசிய அந்த நான்கு நிமிட காட்சி ஒரே சாட்டில் எடுக்கப்பட்டதாம். முழுதாக நடித்த பின்னர் இயக்குநர் கட் சொல்லியும் யாரிடமும் எந்தவிதமான ரியாக்க்ஷனும் இல்லையாம். ஒருவேளை நடிப்பில் சொதப்பிவிட்டோமோ என்று ஜெயம் ரவி நினைத்தபோது அங்கிருந்த லைட் மேன்கள் கண்கலங்கி நின்றார்களாம். உடனே நடிகர் பிரகாஷ் ராஜ் ஓடிவந்து இவரை கட்டிப்பிடித்து பாராட்டியதாக ஜெயம் ரவி கூறி இருக்கிறார்.

அப்பா செய்த வேலை

அப்பா செய்த வேலை

அந்தப் படத்தை ரவியின் அப்பா மோகன் எடிட் செய்த போது மற்ற நடிகர்களின் ரியாக்க்ஷன் சாட்டை வைக்காமல் ரவி நடித்த அந்த ஒரு சாட்டை மட்டும் தொடர்ச்சியாக நான்கு நிமிடங்கள் வைத்தாராம். அதனை பார்த்த ரவி நீங்கள் எடிட்டராக வேலை செய்யாமல் ஒரு அப்பாவாக வேலை செய்து விட்டீர்கள் என்று கூற செருப்பு கழட்டி அடிப்பேன் என்று கோபத்தில் கூறினாராம். அப்போது ஆக்டிங்கை விட ரியாக்ட் செய்வது முக்கியம் என்று நீங்கள் தான் எனக்கு கற்றுக் கொடுத்தீர்கள் என்று கூறிய போது வெளியே போடா என்று துரத்தி விட்டாராம். அதன் பின்னர் ரவி கூறியது போல மற்ற நடிகர்களின் ரியாக்க்ஷன்களையும் வைத்து எடிட் செய்து பின்னர் போட்டுக் காட்டினாராம். அதைத்தான் நாம் படத்தில் பார்த்து உள்ளோம் என்று ஜெயம் ரவி கூறியிருக்கிறார்.

அப்பா மகன் மீது வைத்திருக்கும் பாசமும் மகன் அப்பா மீது வைத்திருக்கும் பாசமும் எந்த அளவுக்கும் மாறவே இல்லை, ஆனால் வேலை என்று வந்து விட்டால் ஆரோக்கியமான விவாதங்கள் எப்போதும் தொடரத்தான் செய்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X