»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சந்திரமுகி படத்தில் சிறிய வேடத்தில் நடிக்க முன் வந்த கோபிகாவை, இந்த வேடத்தில் நடித்தால் உங்களுக்கு பலன் இருக்காது என்று கூறி அவருக்குஅறிவுரை கூறி திருப்பி அனுப்பியுள்ளார் ரஜினி.

சந்திரமுகியில் ஜோதிகா, நயனதாரா ஆகியோர் பிரபு, ரஜினிக்கு ஜோடிகளாக நடிக்கின்றனர்.

இன்னொரு முக்கியமான அதேசமயம் மிகவும் சிறிய ரோலுக்கு சமீபத்திய பிரபலமான கோபிகாவைப் போடலாமா என்று இயக்குனர் பி.வாசுயோசித்துள்ளார்.

இதை கோபிகாவிடம் கூறியுள்ளார். சந்தோஷமடைந்த கோபிகா உடனடியாக ரஜினியைப் பார்த்து நன்றி கூற வந்துள்ளார்.

ரஜினியிடம் உங்களது படத்தில் சின்ன ரோலாக இருந்தாலும் பரவாயில்லை, நான் நடிக்கிறேன் என்று கோபிகா கூற சிறிது நேரம் யோசித்திருக்கிறார்.

பின்னர் கோபிகாவிடம் பேசிய ரஜினி, ஆட்டோகிராப் போன்ற மிகப் பெரிய படத்தில் நடித்து மிகப் பெரிய புகழையும், பெருமையையும் பெற்று விட்டீர்கள்.நானே உங்க பேனாகிவிட்டேன்.

எனது படத்தில் உங்களுக்கு வாசு தரத் திட்டமிட்டுள்ளது மிகவும் சிறிய வேடம். அது உங்களுக்குப் பெருமையாக இருக்காது. எனது அடுத்த படத்தில் நல்லவேடத்தில் நீங்கள் நச்சயம் நடிக்கலாம், இந்த வேடம் உங்களுக்கு வேண்டாம்.

உங்க கேரியருக்கு இந்த கேரக்டர் உதவியா இருந்தா நானே நடிக்கச் சொல்லி இருப்பேன். இது அப்படிப்பட்ட கேரக்டரும் அல்ல. யார் வேண்டுமானாலும்நடிக்கக் கூடிய சின்ன வேடம் தான். இதுல போய் நீங்க நடிக்கனுமா? வேண்டாமே என்று பண்புடன் கூறி அனுப்பி வைத்தாராம்.

ரஜினியின் இந்த அட்வைஸைக் கேட்ட கோபிகா, தன் மீது அக்கறை எடுத்துக் கொண்டதற்காக நன்றி கூறிவிட்டுத் திரும்பி வந்தாராம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil