Don't Miss!
- News
புதிய உச்சம் தொட்ட ஜிஎஸ்டி வருவாய்.. ஜனவரி மாதம் படைக்கப்பட்ட ரெக்கார்ட்.. ப்பா இவ்வளவு வசூலா?
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Technology
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கவுண்டமணி ஒரு என்சைக்ளோபீடியா.. என்ன கேட்டாலும் சொல்லுவார்.. சரத்குமார் பெருமிதம்!
முன்னணி நடிகர்களுடன் இணைந்து துணை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியவர் நடிகர் சரத்குமார்.
80களில் சினிமாவில் நடிக்க தொடங்கிய சரத்குமார், ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதை பாத்திரங்களிலேயே நடித்து வந்தார்.
தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் சரத்குமார், காமெடி நடிகர் கவுண்டமணி பற்றிய சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
என் உடலை ஏன் காட்டக்கூடாது?அடுத்த நிர்வாண போட்டோஷூட்..என்ன இப்படி ஆரம்பிச்சுட்டாங்க!

கிடைத்த அங்கீகாரம்
துணை நடிகராக இருந்து வந்த சமயத்தில் இவரது நடிப்புக்கு பல பாராட்டுக்களும், அங்கீகாரமும் கிடைத்தது. 1992 ஆம் ஆண்டு இவர் நடித்த நட்சத்திர நாயகன் படத்தின் வெற்றி இவரை ஒரு சூப்பர் ஹீரோவாக மாற்றியது. கட்டபொம்மன், அரண்மனை காவலன், நம்ம அண்ணாச்சி, என்று பல படங்களில் தொடர்ந்து ஹிட் கொடுத்த சரத்குமார், நாட்டாமை படத்தின் மூலம் பல ரசிகர்களைப் பெற்றதுடன், கிராமத்து கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்தி பல பட வாய்ப்புகளை பெற்றார். கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான நாட்டாமை திரைப்படம் சரத்குமாரின் சினிமா வாழ்க்கைக்கு ஒரு டர்னிங் பாயிண்டாகவே அமைந்தது.

தொடர்ந்து ஹிட் கொடுத்த சரத்குமார்
கேப்டன், கூலி, நாடோடி மன்னன், சூரிய வம்சம், நட்புக்காக, ரகசிய போலீஸ் என்று இவர் நடித்த வெற்றிப்படங்கள் ஏராளம். தனது எதார்த்தமான நடிப்பால், பல ரசிகர்களைப் பெற்ற நடிகர் சரத்குமார் நட்புக்காக, சிம்ம ராசி, பாட்டாளி, மாயி, அரசு என்று தொடர்ந்து ஹிட் படங்கள் ஆக கொடுத்து வந்தார். 80களில் இருந்து இன்று வரை இவர் நடித்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் பெற்றுள்ளது.
சரத்குமார் பல படங்களில் கவுண்டமணி மற்றும் வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ளார். கவுண்டர் டைலாக்குக்கு பேர் போன நடிகர் கவுண்டமணி பற்றி சரத்குமார் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

சினிமாவின் என்சைக்ளோபீடியா
கவுண்டமணி குறித்து சரத்குமார் கூறுகையில், " கவுண்டமணி ஒரு சினிமாவின் என்சைக்ளோபீடியா, எந்த படத்தை பற்றி கேள்வி கேட்டாலும் விளக்கமாக கூறுவார். ஹாலிவுட், பாலிவுட் என்று அனைத்து படங்களையும் பார்க்கும் கவுண்டமணி, ஏதாவது ஒரு காட்சியைப் பார்த்தால் இந்த காட்சி ஏற்கனவே அந்த படத்தில் வந்துள்ளது என்று சரியாக சொல்வார். ஒரு படத்தில் யார் யாரெல்லாம் நடித்துள்ளார்கள், அவர்கள் வேறு எந்த படத்தில் எல்லாம் நடித்திருக்கிறார்கள் என்ற முழு விவரமும் கவுண்டமணிக்கு தெரியும், சினிமாவை பற்றி எந்த சந்தேகம் இருந்தாலும் கவுண்டமணியிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் அந்த அளவிற்கு அவர் லைப்ரரி மாதிரி, என்று கூறியுள்ளார்,

கவுண்டர் கொடுத்த படியே இருப்பார்
அதுமட்டுமில்லாமல் சூட்டிங் ஸ்பாட்டிலும் யார் என்ன டயலாக் சொன்னாலும், அதற்கு கவுண்டர் கொடுத்த படியே இருப்பார். உடனுக்குடனே தனது சொந்த வசனங்களை சொல்லும் திறமை கவுண்டமணியிடம் உண்டு என்று சரத்குமார் கூறியுள்ளார். அதேபோல் தான் வடிவேலுவும் தனது சின்ன சின்ன அசைவுகளில் கூட பலரையும் சிரிக்க வைக்கும் திறமை கொண்டவர். அவர் இருந்தாலே சூட்டிங் ஸ்பாட் கலகலப்பாக இருக்கும் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.