»   »  ஆப்கன் மண்ணில் வாரணம் ஆயிரம்

ஆப்கன் மண்ணில் வாரணம் ஆயிரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கெளதம் மேனன், சூர்யா இணையில் உருவாகும் வாரணம் ஆயிரம், விரைவில் ஷூட்டிங்குக்குப் போகவுள்ளது.

காக்க காக்க மூலம் சூர்யாவின் நடிப்புக்கு புதுப் பரிமாணம் கொடுத்தவர் கெளதம் மேனன். அதேபோல, கெளதமின் படங்களில்தான் ஜோதிகா படு அழகாக தெரிவார். அப்படி ஒரு கைவண்ணம் கெளதமுக்கு.

இந்த நிலையில் கெளதமும், சூர்யாவும் வாரணம் ஆயிரம் மூலம் மீண்டும் இணைகிறார்கள். வாரணம் ஆயிரம் படத்தை படு வித்தியாசமாக படமாக்க முடிவு செய்துள்ளார் கெளதம். இதுவரை இந்தியத் திரைப்படங்களில் காட்டப்படாத லொகேஷன்களுக்குப் போக தீர்மானித்தார்.

இதற்காக அவர் செலக்ட் செய்த இடம் ஆப்கானிஸ்தான். பயங்கரவாதம் தொட்டில் கட்டி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் படப்பிடிப்பு என்றவுடன் கெளதம் யூனிட்டில் உள்ள பலரும் ஆடிப் போய் விட்டார்களாம். இருந்தாலும் ஆப்கானிஸ்தான் பறப்பதற்கு மனதளவில் தயாராக ஆரம்பித்து விட்டனராம்.

தலிபான்கள் பூமியில் லைட் கேமரா ஆக்ஷன் சரிப்பட்டு வருமா என்று கெளதமிடம் கேட்டால், ஆப்கனிஸ்தான் நிலைமை எனக்குத் தெரியும். இருந்தாலும் கதைக்கு வித்தியாசமான களம் தேவைப்பட்டது. அதற்கு ஆப்கானிஸ்தான் சரியான இடமாகத் தோன்றியது. கிட்டத்தட்ட ஒரு மாதமாக யோசித்து, விவாதித்துத்தான் ஆப்கனை தேர்வு செய்தோம்.

படத்தைப் பார்த்த பிறகு எனது முடிவு சரியானதுதான் என்று எல்லோரும் புரிந்து கொள்வார்கள் என்றார்.

இப்படியும் பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்கலாமோ!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil