»   »  முதல் கணவரின் டைவர்ஸ் வழக்கு:கிரகலட்சுமிக்கு நோட்டீஸ்

முதல் கணவரின் டைவர்ஸ் வழக்கு:கிரகலட்சுமிக்கு நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

நடிகர் பிரஷாந்த்தின் மனைவி கிரகலட்சுமியின் முதல் கணவர் வேணு பிரசாத் தொடர்ந்துள்ள விவாகரத்து வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கிரகலட்சுமிக்கு குடும்ப நல நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடிகர் பிரஷாந்த்தின் மனைவி கிரகலட்சுமி. இவருக்கும் கேரளாவைச் சேர்ந்தவரான நாராயணன் வேணு பிரசாத் என்பவருக்கும் ஏற்கனவே பதிவுத் திருமணம் நடந்து விட்டது.

ஆனால் காலத்தின் கோலத்தால், இருவரும் சேர்ந்து வாழாமல் நண்பர்களாகப் பிரிந்து விட்டனராம். இந்த விவகாரங்களை தனக்குத் தெரிவிக்காமல் ஏமாற்றி கல்யாணம் செய்து விட்டார் கிரகலட்சுமி என்று பிரஷாந்த் குற்றம் சாட்டியுள்ளார். விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்திலும் மனு செய்துள்ளார்.

இந்த நிலையில் பிரசாத்தும் தன் பங்குக்கு விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை நீதிபதி தேவதாஸ் பரிசீலித்தார்.

பின்னர் இதுதொடர்பாக கிரகலட்சுமி ஜூலை 25ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அன்றைய தினமே வழக்கும் தள்ளி வைக்கப்பட்டது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil