»   »  கிரகலட்சுமிக்கு புது சிக்கல்!!

கிரகலட்சுமிக்கு புது சிக்கல்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேணு பிரசாத்துக்கும், கிரகலட்சுமிக்கும் இடையே நடந்த திருமணத்திற்கு போதுமான ஆதாரங்கள் உள்ள நிலையில், கல்யாணமே நடக்கவில்லை என்று கிரகலட்சுமி கூறுவது அவருக்குத்தான் சிக்கலை ஏற்படுத்தும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்பு பிரஷாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து தனது மனைவிக்கும், நாராயணன் வேணு பிரசாத் என்பவருக்கும் திருமணமாகி விட்டது. அதை மறைத்து விட்டு தனக்குத் திருமணம் செய்து வைத்து விட்டனர் என்று கிரகலட்சுமி மீது குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக கிரகலட்சுமியின் முதல் திருமணத்திற்கான பதிவுத் திருமணச் சான்றிதழையும் அவர் காட்டினார். இதன் அடிப்படையில், போலீஸிலும் புகார் கொடுத்தார்.

இதற்கு உடனடியாக, ஆணித்தரமாக கிரகலட்சுமி தரப்பிலிருந்து மறுப்பு வரவில்லை. மேலோட்டமாக பிரஷாந்த் பொய் சொல்வதாக மறுத்தனர்.

ஆனால் கிரகலட்சுமிக்கும், பிரசாத்துக்கும் திருமணம் நடந்தது உண்மைதான் என்று அந்தத் திருமணத்திற்கு சாட்சிக் கையெழுத்து போட்டவர்கள் தெளிவாக கூறினர். மேலும், பிரசாத்தே நேரில் போலீஸில் ஆஜராகி தனக்கும், கிரகலட்சமிக்கும் இடையே கல்யாணம் நடந்தது உண்மைதான் என்று கூறி வாக்குமூலம் அளித்தார்.

ஆனால் தனக்கும் பிரசாத்துக்கும் கல்யாணமே நடக்கவில்லை. அவரது சகோதரி எனது தோழி. அவர் கேட்டார் என்பதற்காக எனது பட்டப் படிப்புச் சான்றிதழ்களை அவரிடம் கொடுத்தேன். அதை வைத்து போர்ஜரியாக கையெழுத்துப் போட்டு மோசடி நாடகம் ஆடுகிறார் பிரசாத் என்று நேற்று போலீஸில் புதிய வாக்குமூலம் கொடுத்துள்ளார் கிரகலட்சுமி.

இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தங்களிடம் கிரகலட்சுமி முதல் திருமணம் தொடர்பான ஆதாரங்கள் பக்காவாக இருப்பதாக பிரஷாந்த்தின் வக்கீல் ஆனந்தன் கூறியுள்ளார். இவற்றை காவல்துறையிடமும், நீதிமன்றத்திலும் விரைவில் சமர்ப்பிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கிரகலட்சுமியின் புதிய வாக்குமூலம் அவருக்கே சிக்கலைக் கொடுக்கப் போவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் ஒரு அதிகாரி கூறுகையில், பிரசாத், கிரகலட்சுமி தொடர்பான பதிவுத் திருமணச் சான்றிதழ் உணமையானதுதான், அது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அது தன்னுடைய திருமண சான்றிதழ் இல்லை, என்று கிரகலட்சுமி கூறுவது குழப்பத்தைத் தருகிறது.

வேணு பிரசாத்தின் சகோதரிக்கு தான் கொடுத்த படிப்புச் சான்றிதழைப் பயன்படுத்தி போலியாக ஆவணம் தயாரித்து விட்டதாக கூறியுள்ளார் கிரகலட்சுமி.

தன்னை போலீஸார் கைது செய்து விடுவார்களோ என்று பயந்துதான் இவ்வாறு கூறியுள்ளார் என்று கருதுகிறோம். ஆனால், தேவையில்லாமல் போலீஸை குழப்பி வழக்கை பின்னடையச் செய்வது, அவருக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil