»   »  கிரகலட்சுமி குடும்பம் கோர்ட்டில் சரண்!

கிரகலட்சுமி குடும்பம் கோர்ட்டில் சரண்!

Subscribe to Oneindia Tamil

நடிகர் பிரஷாந்த்தின் மனைவி கிரகலட்சுமியின் குடும்பத்தினர் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணைடந்து முன் ஜாமீன் பெற்றனர்.

தனது மனைவி கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. இதை கிரகலட்சுமி, அவரது குடும்பத்தினர், பெண் பார்த்துக் கொடுத்த டாக்டர் ரங்கபாஷ்யம் உள்ளிட்டோர் மறைத்து விட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரஷாந்த் கொடுத்த புகாரின் பேரில் மாம்பலம் போலீஸார் கிரகலட்சுமியின் பெற்றோர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதில், கிரகலட்சுமி ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றிருந்தார். இதையடுத்து கிரகலட்சுமியின் தந்தை தனசேகரன், தாயார் சிவகாமசுந்தரி, அண்ணன்கள் பொன்குமார், நாகராஜ், அண்ணி அபிராமி, டாக்டர் ரங்கபாஷ்யம், சித்ரா ரங்கபாஷ்யம் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்மனு செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் 7 பேரும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீன் பெறலாம் என உத்தரவிட்டது.

இதையடுத்து 7 பேரும் இன்று எழும்பூர் 5வது நீதிமன்றத்தில் நீதிபதி முருகானந்தம் முன்னிலையில் சரணடைந்தனர். ரூ. 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாதத்தின் பேரில் அனைவருக்கும் நீதிபதி முன்ஜாமீன் வழங்கினார்.

கிரகலட்சுமி குடும்பத்தினர் 2 வாரங்களுக்கு தினசரி மாம்பலம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். டாக்டர் ரங்கபாஷ்யம் தம்பதி வாரத்தில் 2 நாட்களுக்கு ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே நிபந்தனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil