»   »  பிரஷாந்த் மீது வரதட்சணை வழக்கு-கிரகலட்சுமி மனு

பிரஷாந்த் மீது வரதட்சணை வழக்கு-கிரகலட்சுமி மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:நடிகர் பிரஷாந்த் மீது வரதட்சணை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரி அவரது மனைவி கிரகலட்சுமி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நீண்ட நாள் போராட்டத்திற்கு பின்பு இப்போதுதான் ஒரு வழியாக ஸ்ரீகாந்த்-வந்தனா பிரச்சனை முடிவடையும் நிலைக்கு வந்துள்ளது. ஆனால் நடிகர் பிரஷாந்த்-கிரகலட்சுமி விவகாரம் முடியவே முடியாது போலிருக்கிறது.

பிரஷாந்த்-கிரகலட்சுமி விவகாரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. நடிகர் பிரஷாந்த், அவரது பெற்றோர்கள் உட்பட 4 பேர் மீது வரதட்சணை ஒழிப்பு போலீஸிடம், தன்னை கொடுமைப்படுத்தியதாக வரதட்சணை புகார் கொடுத்திருந்தார் கிரகலட்சுமி.

இந்த வழக்கில் பிரஷாந்த் உட்பட 4 பேரும் இந்த புகாரில் முன் ஜாமீன் பெற்றனர். ஆனால் கிரகலட்சுமி கொடுத்த புகாரின் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில் கிரகலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், தான் கொடுத்த வரதட்சணை புகாரின் அடிப்படையில் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் கிரஹலட்சுமி.

இந்த மனு நாளை நீதிபதி பழனிவேல் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil