»   »  பிரஷாந்த் வழக்கை ரத்து செய்யகிரகலட்சுமி கோரிக்கை

பிரஷாந்த் வழக்கை ரத்து செய்யகிரகலட்சுமி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

தன்னை ஏமாற்றி மணந்து கொண்டதாக என் மீது எனது கணவர் பிரஷாந்த் தொடர்ந்துள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி கிரகலட்சுமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வேணு பிரசாத் என்பவருடன் தனக்கு நடந்த முதல் திருமணத்தை மறைத்து விட்டு என்னைக் கல்யாணம் செய்து கொண்ட கிரகலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நடிகர் பிரஷாந்த் போலீஸில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தற்போது சைதாப்பேட்டை 17வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆகஸ்ட் 30ம் தேதி (இன்று) கிரகலட்சுமி நேரில் ஆஜராக வேண்டும் என கிரகலட்சுமிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

இந்த நிலையில், கிரகலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்தார். அந்த மனுவில், என் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டு அதன் மீது விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

எனக்கு பிரசாத் என்பவருடன் சட்டப்பூர்வமாக திருமணம் நடக்கவில்லை. எனக்கும் எனது கணவர் பிரஷாந்த்துக்கும் இடையிலான வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

எனவே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் என் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

நேற்று இந்த வழக்கு நீதிபதி பழனிவேலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கோரி பிரஷாந்த் சார்பில் மனு தாக்கல் செயய்பப்ட்டது.

கிரகலட்சுமி, பிரசாத் திருமணத்திற்கு முறையான ஆதாரங்கள் உள்ளன. கிரகலட்சுமியை தனது மனைவியாக கூறி பிரசாத் கிரெடிட் கார்டு வாங்கியுள்ளார். அதில் கிரகலட்சுமியும் கையெழுத்துப் போட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்தால்தான் உண்மைகள் வெளி வரும். எனவே வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று பிரஷாந்த் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பைத் தள்ளிவைப்பதாக அறிவித்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil