»   »  கிரகலட்சுமி குடும்பம் தலைமறைவு

கிரகலட்சுமி குடும்பம் தலைமறைவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை போலீஸாரின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக கிரகலட்சுமியின் தந்தை, தாயார், டாக்டர் ரங்கபாஷ்யம் உள்ளிட்டோர் தலைமறைவாகி விட்டனர்.

என்னைக் கல்யாணம் செய்வதற்கு முன்பே கிரகலட்சுமிக்கு கேரளாவைச் சேர்ந்த நாராயணன் வேணு பிரசாத்துடன் திருமணம் ஆகி விட்டதாக நடிகர் பிரஷாந்த் கூற, அவர்களது விவகாரத்தில் பெரும் திருப்பம் ஏற்பட்டது.

பிரசாத், கிரகலட்சுமி திருமணம் தொடர்பாக திருமண சான்றிதழின் நகல், கிரெடிட் கார்டில் தனது கணவர் பிரசாத் என்று கிரகலட்சுமி கொடுத்துள்ள தகவல் ஆகியவற்றை ஆதாரமாக கொடுத்துள்ளார் பிரஷாந்த்.

பிரஷாந்த் இதுதொடர்பாக கொடுத்துள்ள புகாரின் பேரில் கிரகலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், கிரகலட்சுமி அவரது பெற்றோர் உள்ளிட்டோர் மீது பல்வேறு பிரிவுகளில் மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் வேணு பிரசாத்துக்கும், எனக்கும் கல்யாணம் நடக்கவில்லை. பதிவுத் திருமணச் சான்றிதழிலில் உள்ள கையெழுத்து என்னுடையதல்ல என்று கூறி கிரகலட்சுமி எழுத்துப்பூர்வமாக கொடுத்துள்ள வாக்குமூலத்தை வைத்து தற்போது போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

அந்த வாக்குமூலத்தில் இருக்கும் கையெழுத்தையும், பதிவுச்சான்றிதழில் இருக்கும் கையெழுத்தையும் தடய அறிவியல் சோதனைக்கு போலீஸார் அனுப்பவுள்ளனர்.

வேணு பிரசாத் தனது கணவர் என்று கூறி கிரகலட்சுமி கடந்த 3 வருடங்களாக பயன்படுத்தி வந்த கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்தின் ஒரிஜினல் பிரதியை போலீஸார் சம்பந்தப்பட்ட வங்கியிடம் கேட்டுள்ளனர்.

இதற்கிடையை, கிரகலட்சுமி மற்றும் அவரது பெற்றோர் தனசேகரன், சிவகாமசுந்தரி, அண்ணன்கள் நாகராஜ், பொன்குமார், அண்ணி அபிராமி பொன்குமார், மாமா டாக்டர் ரங்க பாஷ்யம், அவரது மனைவி சித்ரா ரங்கபாஷ்யம் ஆகியோர் மீது மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

8 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்த போலீஸார் தீர்மானித்து அனைவரின் வீடுகளுக்கும் போலீஸார் சென்றனர். ஆனால் அவர்கள் யாரும் வீடுகளில் இல்லை. தலைமறைவாகி விட்டனர். இதனால் போலீஸார் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், கிரகலட்சுமியின் பெற்றோர் உள்ளிட்ட 7 பேரின் சார்பிலும் இன்று முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil