மனைவியின் பிறந்தநாளை படபிடிப்பு தளத்தில் ஸ்பெஷல் ஆக்கிய ஜிவி..!!- வீடியோ
சென்னை: ஜி.வி. பிரகாஷ் குமார் தனது மனைவி சைந்தவியின் பிறந்தநாளை ஐங்கரன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் குமார் கை நிறைய படங்கள் வைத்து பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் ஐங்கரன் படத்தின் படப்பிடிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளார்.
ரவி அரசு இயக்கி வரும் இந்த படத்தில் ஜி.வி.க்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்து வருகிறார்.
பிறந்தநாள்
ஜி.வி. பிரகாஷ் குமாரின் மனைவியும், பாடகியுமான சைந்தவி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
ஷூட்டிங்
ஐங்கரன் படப்பிடிப்பு தளத்திலேயே சைந்தவியின் பிறந்தநாளை கொண்டாடினார் ஜி.வி. பிரகாஷ். சைந்தவி கேக் வெட்டி அதை தனது கணவருக்கு ஊட்டி விட்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
வாழ்த்து
வாழ்த்து தெரிவித்து தனது பிறந்தநாளை ஸ்பெஷலாக்கிய அனைவருக்கும் நன்றி என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சைந்தவி. இந்த பிறந்தநாள் மறக்க முடியாததாக அமைந்துள்ளதாம்.
இயக்குனர்
ஜிவி பிரகாஷ் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அடங்காதே படத்திலும் நடித்துள்ளார். சைந்தவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சண்முகமும் கலந்து கொண்டார்.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.