twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்று கமல் ஹாஸன் பிறந்த நாள்! #HBDKamal63

    By Shankar
    |

    Recommended Video

    அரசியல் களத்தில் விடிந்துள்ள கமலின் 63 -வது பிறந்தநாள்- வீடியோ

    சென்னை: நடிகர் கமல் ஹாஸன் இன்று 63வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

    உலக நாயகன், கலைஞானி என ரசிகர்களால் அழைக்கப்படும் கமல் ஹாஸன் 1954-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்தவர்.

    தனது 5வது வயதிலேயே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான குடியரசுத் தலைவர் விருதினைப் பெற்றார்.

    தொடர்ந்து பார்த்தால் பசி தீரும், பாத காணிக்கை போன்ற சிவாஜி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், எம்ஜிஆருடன் ஆனந்த ஜோதி படத்தில் நடித்தார்.

    பாலச்சந்தர்

    பாலச்சந்தர்

    18 வயதை எட்டிய கமல் ஹாஸன் சிறு சிறு வேடங்களில் தமிழ், மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தவரை நாயகனாக்கியவர் கே பாலச்சந்தர். அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன் ஆகிய இரு படங்களில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் தொடர்ந்து நடித்தார் கமல்.

    கோவணம் கட்டி

    கோவணம் கட்டி

    பாரதிராஜாவின் முதல் படமான பதினாறு வயதினிலே கமல் ஹாஸனின் நடிப்பு வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளப் படங்களில் நடித்து, ஒரு பெரிய இடத்துக்கு வந்திருந்த கமல் ஹாஸனை கோவணம் கட்டி நடிக்க வைத்தார் பாரதிராஜா. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமலின் நட்சத்திர அந்தஸ்து இன்னும் உயர்ந்தது.

    பாலுமகேந்திராவுடன்

    பாலுமகேந்திராவுடன்

    ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான இளமை ஊஞ்சலாடுகிறது கமலின் சினிமா அந்தஸ்தை இன்னும் ஒரு படி உயர்த்தியது. பாலுமகேந்திராவின் இயக்கத்தில் கோகிலா (கன்னடம்), அழியாத கோலங்கள் படங்களில் நடித்தார். இருவரும் இணைந்த மூன்றாம் பிறைக்காக சிறந்த நாயகனுக்கான முதல்தேசிய விருதைப் பெற்றார்.

    ராஜபார்வை

    ராஜபார்வை

    1981-ல் தானே கதை திரைக்கதை எழுதி தயாரித்து ராஜபார்வை படத்தில் நடித்தார். அந்தப் படம் சரியாகப் போகவில்லை என்றாலும் பெரும் பாராட்டுகளைக் குவித்தது. பின்னாளில் இயக்குநராக, தயாரிப்பாளராக கமல் மாற இந்தப் படம் ஒரு அடித்தளமாக அமைந்தது.

    கமர்ஷியல் வெற்றிகள்

    கமர்ஷியல் வெற்றிகள்

    எண்பதுகளில் ஏராளமான கமர்ஷியல் படங்களில் நடித்தார் கமல் ஹாஸன். அதற்கு சகலகலா வல்லவன் படத்தின் வெற்றி முக்கிய காரணமாக அமைந்தது. கமர்ஷியல் படங்களிலும் அவர் தனி முத்திரைப் பதித்தார். அதே நேரத்தில் இந்தியிலும் கமலின் சினிமா பயணம் தொடர்ந்தது. அதற்கு காரணம் பாலச்சந்தரின் ஏக் துஜே கே லியே பெற்ற பெரும் வெற்றி.

    பல வேடங்கள்

    பல வேடங்கள்

    தொன்னூறுகளுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒரு படம் என்ற கொள்கையைக் கடைப்பிடித்தார் கமல்.

    இரட்டை வேடங்கள், மூன்று வேடங்கள் என நடித்த கமல், மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நான்கு வித்தியாச வேடங்களில் தோன்றி அசத்தினார். அடுத்து தசாவதாரத்தில் 10 வேடங்களில் நடித்து சாதனைப் படைத்தார்.

    விருதுகள்

    விருதுகள்

    நான்கு முறை சிறந்த நாயகனுக்காக தேசிய விருது பெற்றவர் கமல் ஹாஸன் (மூன்றாம் பிறை, நாயகன், தேவர் மகன், இந்தியன்). 17 முறை ஃபிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளார். நாட்டில் அதிமுக முறை இந்த விருது வென்ற நடிகர் கமல்தான். 9 முறை மாநில அரசின் விருதையும் பெற்றுள்ளார். கமல் பெற்ற விருதுகளின் பட்டியல் மிகப் பெரியது.

    பரபரப்பான பிறந்த நாள்

    பரபரப்பான பிறந்த நாள்

    இன்று தனது 63வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் கமல். வழக்கமாக கமலின் பிறந்த நாள் ஒரு நாள் கொண்டாட்டம், ரத்ததானம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என முடிந்துவிடும். ஆனால் இந்த முறை பரபரப்பான அரசியல் களத்தில் விடிந்துள்ளது. இதன் தொடர்ச்சி எப்படி இருக்கும் என்பது போகப் போகத் தெரியும்.

    பிறந்த நாள் வாழ்த்துகள், கமல் ஹாஸன்!

    English summary
    Kamal Haasan is celebrating his 63rd birthday today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X