»   »  லேடி சூப்பர் ஸ்டார் டு தலைவி...! HBD நயன்தாரா #HBDNayanthara

லேடி சூப்பர் ஸ்டார் டு தலைவி...! HBD நயன்தாரா #HBDNayanthara

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டயானா மரியம் குரியன் எனும் நயன்தாராவுக்கு இன்று பிறந்த நாள். முன்னெப்போதும் இல்லாத உச்ச நட்சத்திர அந்தஸ்துடன் இந்த ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் நயன்தாரா.

பிறப்பால் மலையாளி என்றாலும் நயன்தாரா பிறந்தது கேரளாவில் அல்ல, கர்நாடகத்தில். 2003-ல் மனசினக்கர என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழுக்கு வந்தாய் அய்யா படம் மூலம். அடுத்த படத்திலேயே ரஜினிக்கு ஜோடியானார், சந்திரமுகியில். அன்றே உச்சத்துக்கும் போய்விட்டார்.

நம்பர் ஒன்

நம்பர் ஒன்

2005லிருந்து தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாகத் தொடர்கிறார் நயன்தாரா. இடையில் சிம்பு விவகாரத்தில் சில மாதங்கள் தமிழ் சினிமா பக்கம் வராமல் இருந்தவர், சிவாஜி, குசேலன் படங்களில் நடித்தார். அதன் பிறகு இன்று வரை நயன்தாராவின் ஆதிக்கம் தொடர்கிறது.

ரூட்ட மாத்து

ரூட்ட மாத்து

கவர்ச்சி, நடிப்பு இரண்டிலுமே நயன்தாராவை மிஞ்ச ஆளில்லை. ஆனால் மாயா படத்தின் வெற்றிக்குப் பிறகு தனது ரூட்டை மாற்றிக் கொண்டார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைக் கேட்கத் தொடங்கிவிட்டார். விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த நானும் ரவுடிதான் கூட ஒருவகையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதைதான்.

அறம்

அறம்

டோரா படத்தில் அவர்தான் ஆல் இன் ஆல். படம் சரியாகப் போகவில்லை என்றாலும் அவர் மனம் தளரவில்லை. கோபி நயினார் கதையின் மீது நம்பிக்கை வைத்து அறம் படத்தில் நடித்தார். நயன்தாராவின் மேனேஜர் ராஜேஷ்தான் தயாரிப்பாளர் (அது பெயருக்குத்தான். உண்மையான தயாரிப்பாளர் யார் என்பதை யூகிக்க முடிகிறதல்லவா).

விஜயசாந்தி

விஜயசாந்தி

அறம் படத்தில் நயன்தாராவின் தோற்றம், அந்தப் படத்துக்குக் கிடைத்துள்ள மெகா வெற்றி போன்றவை, இனி அவரது பாணி வேறு என்பதை உணர்த்தியுள்ளன. முன்பு தெலுங்கில் விஜயசாந்தி எப்படி தனி ஆதிக்கம் செலுத்தினாரோ, அந்த ரேஞ்சுக்கு வந்துவிட்டார் நயன்தாரா.

தலைவி

தலைவி

லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தவரை இப்போது தலைவி என அழைக்கிறார்கள் அவரது ரசிகர்கள். நயன்தாராவுக்கும் அரசியல் ஆசை இருக்கிறது. அதை ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு போய் வந்தது, ஜெயலலிதாவைப் பார்க்கப் போனது, சமூகப் பிரச்சினைகளில் அக்கறை காட்டுவதன் மூலம் நிரூபித்துள்ளார். அறம் படத்திலும், நான் மக்களிடம் போகிறேன், அவர்கள் எனக்கு அதிகாரம் வழங்குவார்கள் என்றெல்லாம் வசனம் பேசியுள்ளார்.

ஜாதகம்

ஜாதகம்

நயன்தாராவின் ஜாதகம் அரசியலுக்கு சாதகமாவே உள்ளதாம். அரசியலிலும் சினிமாவிலும் எப்போது, என்ன நடக்கும் என யார் கண்டார்கள். நல்லதே நடக்கட்டும். பிறந்த நாள் வாழ்த்துகள்!

English summary
Today actress Nayanthara is celebrating her birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil