»   »  பிறந்த நாளில் விஜய்யை போட்டிப் போட்டு வாழ்த்திய சினிமா பிரபலங்கள்!

பிறந்த நாளில் விஜய்யை போட்டிப் போட்டு வாழ்த்திய சினிமா பிரபலங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய்யை ரசிகர்கள் மட்டுமின்றி சக நட்சத்திரங்களும் போட்டிபோட்டு வாழ்த்தி வருகின்றனர்.

நடிகர் ஜி.வி.பிரகாஷ், விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று வாழ்த்த அதனை ஏகப்பட்ட விஜய் ரசிகர்கள் லைக் செய்து தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

அதிலிருந்து ஒருசில திரைப்பிரபலங்களின் வாழ்த்துகளை இங்கே பார்க்கலாம்.

சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்பதில் சந்தேகமில்லை என்று நடிகர் ஜி.வி.பிரகாஷ் வாழ்த்தியிருக்கிறார்.

விஜய்ணா

நல்ல நண்பனைப் போல பழகும் விஜய் அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று நடிகர் ஆர்யா வாழ்த்தியிருக்கிறார்.

மாஸ் ஹீரோ

சூப்பர் மாஸ் ஹீரோவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று நடிகர் தனுஷ் வாழ்த்தியிருக்கிறார்.

விஜய் சார்

விஜய் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்தியிருக்கிறார்.

இனிமையான

ஜாலியான மற்றும் பழகுவதற்கு இனிமையான விஜய் அண்ணாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று ஜெயம் ரவி வாழ்த்தியிருக்கிறார்.

அறிமுகம்

என்னை அறிமுகம் செய்த விஜய் அண்ணாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று நடிகர் ஜெய் வாழ்த்தியிருக்கிறார்.

சந்தோஷம்

சந்தோஷம், வெற்றி இரண்டுமே உங்கள் வாழ்வில் அதிகமாக இருக்க வேண்டும் என நடிகர் விஷால் வாழ்த்தியிருக்கிறார்.

இதுபோல ஏராளமான நடிக, நடிகையர் விஜய்க்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

English summary
Today Actor Vijay Celebrate his 42nd Birthday. Now Musician-actor GV Prakash called him the next superstar of Tamil cinema."Advance happy birthday to THE NEXT SUPERSTAR of Tamil cinema undoubtedly ..... Ilayathalapathy actorvijay," actor G.V.Prakash wrote on Twitter.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil