»   »  பிரகாஷ் ராஜின் 'ஹேப்பி டேஸ்'

பிரகாஷ் ராஜின் 'ஹேப்பி டேஸ்'

Subscribe to Oneindia Tamil


தெலுங்கில் வெளியாகி ஹிட் ஆன ஹேப்பி டேஸ் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கியுள்ளாராம் பிரகாஷ் ராஜ்.

Click here for more images

தெலுங்கில் வெளியாகும் ஹிட் படஙகளின் ரீமேக் ரைட்ஸை வாங்குவதில் அதிக விருப்பம் காட்ட ஆரம்பித்துள்ளார் பிரகாஷ் ராஜ்.

நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் வெற்றிக் கொடி நாட்டி வரும் பிரகாஷ் ராஜ், அழகிய தீயே, கண்ட நாள் முதல், மொழி ஆகிய படங்களை உருவாக்கியுள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் தெலுங்கில் வெளியான ஹேப்பி டேஸ் படத்தின் ரீமேக் ரைட்ஸை பிரகாஷ் ராஜ் வாங்கியுள்ளாராம். இப்படத்தை இயக்கியவர் சேகர் கம்முல. இவரது இயக்கத்தில் வெளியான கோதவரி, ஆனந்த் ஆகிய படங்கள் பெரும் ஹிட் ஆனவை.

தற்போது மோசர் பெயருடன் இணைந்து வெள்ளித்திரை உள்ளிட்ட மூன்று படங்களைத் தயாரித்து வருகிறார் பிரகாஷ் ராஜ்.

வெள்ளித்திரை படம், மலையாளத்தில் வெளியான உதயனு தாரம் படத்தின் ரீமேக் ஆகும். இதில் பிரகாஷ் ராஜ், பிருத்விராஜ், கோபிகா, லஷ்மி ராய் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

தற்போது தயாரிப்பில் உள்ள படங்களை முடித்து விட்டு ஹேப்பி டேஸ் படத்தை பிரகாஷ் ராஜ் உருவாக்குவார் எனத் தெரிகிறது.

Read more about: happydays, prakashraj, remake

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil