»   »  'தன்னைத்தானே செதுக்கியவன்'.. அஜீத் பிறந்தநாளை தெறிக்க விடும் ரசிகர்கள்

'தன்னைத்தானே செதுக்கியவன்'.. அஜீத் பிறந்தநாளை தெறிக்க விடும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜீத் இன்று தனது 45 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

அஜீத்தின் பிறந்தநாளையொட்டி அன்னதானம், ரத்ததானம், ஸ்பெஷல் ஷோ, தல ஆந்தெம் என்று விதவிதமாக அவரது பிறந்தநாளை ரசிகர்கள் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதையெல்லாம் பார்க்கும்போது அஜீத் ரசிகர் மன்றங்களைக் கலைத்தாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ரசிகர்கள் #hbddearestthalaajith, #thalaajith, "Happy Birthday Thala" போன்ற ஹெஷ்டேக்குகளை உருவாக்கி அவற்றை தேசியளவில் ட்ரெண்டடிக்க வைத்துள்ளனர்.

அதிலிருந்து ரசிகர்களின் ஒருசில வாழ்த்துகளை இங்கே பார்க்கலாம்.

அஜீத் வீட்டின்

நள்ளிரவு 12 மணிக்கு அஜீத் வீட்டு முன் அவரது ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தைப் பதிவிட்டு வாழ்த்தியிருக்கிறார் வாசு.

நல்லவன்-வல்லவன்

அட்டகாசம் படத்தின் பாடல் வரிகளைப் பகிர்ந்து அஜீத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார் கொக்கி குமார்.

உழைப்பாளர் தினம்

'உழைப்பாளர் தினத்தில் பிறந்த உழைப்பாளி' என்று அஜித்தை வாழ்த்தியிருக்கிறார் சசி.

எந்த நிகழ்ச்சிக்கும்

'அஜீத் எந்த விழாவுக்கும் செல்வதில்லை என்றாலும் அவர் பெயர் சொல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நடப்பதில்லை' என்பதை சுட்டிக்காட்டி வாழ்த்தியிருக்கிறார் சந்தியா.

தன்னைத்தானே செதுக்கியவன்

'தன்னைத்தானே செதுக்கியவன்' என்று கூறி அஜீத்தை வாழ்த்தியிருக்கிறார் சத்யசீலன்.

ரசிகர் மன்றம்

'ரசிகர் மன்றத்தைக் கலைத்தாலும் உங்களது ரசிகர்கள் கலையவில்லை' என்று பதிவிட்டு வாழ்த்தியிருக்கிறார் பிரகாஷ்.

இதைப்போன்ற ஏராளமான வாழ்த்துக்களால் #hbddearestthalaajith தொடர்ந்து தேசியளவில் ட்ரெண்டாகி வருகிறது.

English summary
Today Ajith Celebrating his 45th Birthday. Now #hbddearestthalaajith Hashtag Trend on Nationwide in Twitter Page.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil