»   »  இசைக்காதலன் யுவன் - வாழ்த்தும் பிரபலங்கள் #HBDYuvan

இசைக்காதலன் யுவன் - வாழ்த்தும் பிரபலங்கள் #HBDYuvan

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : யுவன் ஷங்கர் ராஜாவை அவரது ரசிகர்கள் U1 என செல்லமாக அழைப்பார்கள் . பல இசையமைப்பாளர்கள் வந்தாலும் யுவனின் பாடல்கள் எப்போதும் ரசிகர்களால் மறக்க முடியாதவையாகவே இருக்கின்றன.

அதிலும் யுவனின் தீம் பாடல்களுக்கு என பிரத்யேகமான ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கொண்டாட்டமான பாடல்களைத் தரும் அதேநேரத்தில் யுவனின் மெலடிகளும் வருடிக் கொடுக்கும்.

இன்று யுவன் ஷங்கர் ராஜாவின் 38-வது பிறந்தநாள். இந்த நாளை அவரது ரசிகர்கள் பல விதங்களில் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் பிரபலங்கள் பலரும் அவருக்கு ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர். இதோ சில பிரபலங்களின் வாழ்த்து ட்வீட்கள்...

காமன் டி.பி :

யுவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை முன்கூட்டியே தெரிவித்திருக்கும் டைரக்டர் வெங்கட்பிரபு யுவன் பிறந்தநாளுக்காக ஸ்பெஷல் காமன் டி.பி-யையும் பகிர்ந்துள்ளார்.

சிறந்த இசைஞர் :

சமீபத்தில், யுவன் இசையமைத்த 'தர்மதுரை' படத்தின் பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. அந்தத் திரைப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

இசையின் சூப்பர்ஸ்டார் :

இசையின் சூப்பர்ஸ்டாருக்கு வாழ்த்துக்கள் எனத் தெரிவித்திருக்கிறார் நடிகர் கிருஷ்ணா.

ராக்ஸ்டார்

என் நண்பன், சகோதரன், ராக்ஸ்டார் யுவனுக்கு வாழ்த்துக்கள் என ட்வீர் செய்திருக்கிறார் நடிகர் ஆர்யா.

இசைகுரு

எனது இசைகுருவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்திருக்கிறார் நடிகரும் யுவனின் சகோதரருமான ப்ரேம்ஜி.

நல்ல மனிதர் :

எனக்குத் தெரிந்த நல்ல மனிதர்களில் யுவனும் ஒருவர் எனப் பாராட்டியுள்ளார் 'மெட்ரோ' படத்தின் இயக்குநர் சிரிஷ். 'ராஜா ரங்கூஸ்கி' படத்தின் மூலம் சிரிஷ், யுவன் இணைகிறார்கள்.

இன்னும் பல திரைப்பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள். ரசிகர்கள் அவரது இசையை நினைவுகூர்ந்து தெரிவிக்கும் வாழ்த்துமழையால் #HBDYuvan ட்ரெண்டிங்கில் இடம்பிடித்திருக்கிறது.

English summary
Music director Yuvan shankar Raja is celebrating his birthday is today. Celebrities wish him a happy birthday. #HBDYuvan is trending now on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil