»   »  ராக தேவனே: இசைஞானிக்கு அபுதாபியில் இருந்து ஒரு கவிதாஞ்சலி!

ராக தேவனே: இசைஞானிக்கு அபுதாபியில் இருந்து ஒரு கவிதாஞ்சலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இளையாராஜாவின் பிறந்தநாளையொட்டி அபுதாபியில் வசிக்கும் அவர் ரசிகர் ஒருவர் கவிதை பாடி வாழ்த்தியுள்ளார்.

இசைஞானி இளையராஜா இன்று தனது 74வது பிறநந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அபுதாபியில் வசிக்கும் வத்தலக்குண்டை சேர்ந்த சிவமணி என்ற ரசிகர் கவிதை மூலம் அவரை வாழ்த்தியுள்ளார்.

Here is a poem to wish Ilayaraja

இசைஞானியை வாழ்த்தி சிவமணி ஒன்இந்தியா இணையதளத்திற்கு அனுப்பி வைத்துள்ள கவிதை,

கவிதை: ராக தேவனே
******************************
அன்னக்கிளியாய் பிறந்து
பிள்ளை நிலவாய் வளர்ந்து
பாடு நிலவாய் தவழ்ந்து
நிலாச்சோறு ஊட்டி
உதயகீதம் பாடி
மௌன ராகங்கள் பேசி
புன்னகை மன்னனாய்
எஜமானாய் இருந்து
கடலோரம் கவிதைகள் சொல்லி
முதல் மரியாதையை தந்து
பயணங்கள் முடியாது
அலைகள் ஓயாது இசைத்து
பிதாமகனாய் உயர்ந்து
நான் கடவுளிடம் சரணடைந்து
அம்மன் கோவில் கிழக்காலே
மெல்ல கதவு திறந்து
இதயகோவிலில் நுழைந்து
வெற்றி விழா கொண்டாடி
இந்திரன் சந்திரனாகி
நாயகன் தளபதியாக அசத்தி
பொல்லாதவன்
போக்கரி ராஜாவை
மனிதனாக்கி
நல்லவனுக்கு நல்லவனை
பணக்கார மாப்பிள்ளையாக்கி
வண்ண வண்ண பாட்டு எழுதி
செந்தமிழ் பாட்டை பாட வைத்து
கிராமத்து மின்னலாய்
நான் பாடும் பாடலை
எங்க ஊரு பாட்டுக்காரனை
புது பாட்டாய் கொடுத்து
அக்னி நட்சத்திரத்திலும்
கரகாட்டம் ஆடி
தாரை தப்பட்டை அடித்து
இதயத்தை சுக்குநூறாக்கி
மறுபடியும்
தேசியக்கீதம் சொல்லி
என்னை பெத்த ராசாவாக
என் ராசாவின் மனதிலே உறைந்து
தலைமுறைகள் பல கண்டு
சாதனை செய்து
சின்ன தம்பியான
அபூர்வசகோதரனே
நீ தான் என் (எங்கள்)பொன் வசந்தம்

English summary
A fan named Sivamani who is living in Abu Dhabi has wished maestro Ilayaraja a very happy birthday by writing a wonderful poem for the legend.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil