»   »  கம்பி எண்ண ஆரம்பித் ஹில்டன்

கம்பி எண்ண ஆரம்பித் ஹில்டன்

Subscribe to Oneindia Tamil

டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல், மது அருந்தி விட்டு, தாறுமாறாக வண்டி ஓட்டிய குற்றத்திற்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹாலிவுட் பிரபலம் பாரீஸ் ஹில்டன் தனது சிறைத் தண்டனைய அனுபவிக்க ஆரம்பித்துள்ளார்.

26 வயதாகும் பாரீஸ் ஹில்டன், கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த ஆண்டு ஜனவரியில், அவருக்கு 36 மாதம் கார் ஓட்டக் கூடாது என்று தடை விதித்து தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 1,500 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

டிரைவிங் லைசன்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், ஜனவரி 15ம் தேதி கார் ஓட்டிச் சென்றதாக கலிபோர்னியா போலீஸார் ஹில்டனைக் கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹில்டனுக்கு 45 நாள் சிறைக் காவல் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது. ஹில்டனுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந் நிலையில் தனது தண்டனையை ஏற்று சிறைக்குச் சென்றுள்ளார் ஹில்டன். நேற்று லாஸ் ஏஞ்செலஸில் உள்ள சிறைக்குச் சென்ற அவர் தண்டனையை வகிக்கத் தயாராக இருப்பதாக அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இதையடுத்து அவரை சிறைக்குள் அதிகாரிகள் அனுமதித்தனர். 45 நாட்கள் சிறைத் தண்டனை என்றாலும் கூட நன்னடத்தையுடன் சிறையில் நடந்து கொண்டால் 23 நாட்களில் விடுவிக்கப்படும் வாய்ப்பு ஹில்டனுக்கு உள்ளது.

எனவே ஹில்டன் 23 நாட்களில் விடுதலையாகக் கூடும் என அவரது வக்கீல்கள் எதிர்பார்க்கின்றனர்.

முன்னதாக நேற்று எம்.டிவி திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஹில்டன் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இப்போது நான் மன ரீதியாக உறுதியாகி விட்டேன். முதலில் தண்டனையை நினைத்துப் பயந்தேன். ஆனால் இப்போது பயம் போய் விட்டது. தண்டனையை அனுபவிக்க நான் தயாராகி விட்டேன் என்றார் ஹில்டன்.

பாரீஸ் ஹில்டன் தண்டனையை அனுபவிக்கப் போகும் சிறை 13 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இங்கு பெண்கள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறையைச் சுற்றிலும் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. பின்பக்கம் ரயில்வே லைனும் உள்ளது. சிறப்பு கைதிகளுக்கான அறையில்தான் ஹில்டன் இருக்கப் போகிறார்.

Please Wait while comments are loading...