»   »  கோலிவுட் 'ஹோச முங்காரு'

கோலிவுட் 'ஹோச முங்காரு'

Posted By:
Subscribe to Oneindia Tamil
Hosa Mungaru movie still
கோலிவுட்டில் படுகர் மொழியில் ஒரு திரைப்படம் உருவாகிறது.

ஊட்டி உள்ளிட்ட நீலகிரி மலைத் தொடர்களின் கிராமங்களில் அதிக அளவிலும் கோவை, திருப்பூர், பெங்களூர் போன்ற இடங்களிலும் விரவி வாழ்ந்து வரும் மக்கள் படுகர்கள்.

இந்த சமூகத்தைச் சேர்ந்த வெற்றிவேலன் என்பவர் முழுக்க முழுக்க படுகர் மொழியில் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தின் பெயர் ஹொச முங்காரு (புதிய வசந்தம் என்று அர்த்தமாம்).

இந்த சமூகத்தின் கலாச்சாரம், வாழ்வியல் குறித்து காதல் கலந்து சொல்லப் போகிறார் வெற்றிவேலன்.

எந்த மொழி மாற்றமும் ெசய்யாமல் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறாராம்.

தமிழ்-மலையாளம் போல படுகர் மொழிக்கும் கன்னடத்துக்கும் நெருக்கமான தொடர்புண்டு. இதனால் இந்தப் படத்தை தமிழகத்தில் மட்டுமல்லாமல் கர்நாடகத்திலும் திரையிட இருக்கிறார்.

படத்தை இயக்குவதோடு தானும் இதில் நடிக்கிறார் வெற்றி. இவர் தவிர நியாஷ் என்ற ஹீரோவும் இவர்களுக்கு ஜோடியாக பிரியா, சந்தியா ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களும் படுகர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே.

மெட்டி ஒலி உள்ளிட்ட சீரியல்களில் அசோசியேட் டைரக்டராக பணியாற்றியுள்ள வெற்றிவேலன் இரு திரைப்பட இயக்குனர்களிடமும் உதவியாளராக இருந்துள்ளார். அந்த அனுபவத்தை வைத்து தனது தாய் மொழியில் இந்தப் படத்தை இயக்குகிறார்.

படத்தின் இசையமைப்பாளர் முகேசும் கூட படுகர் இனத்தைச் சேர்ந்தவர் தான்.

இந்தி பேசும் வட மாநிலங்களில் பேசப்படும் போஜ்பூரி மொழியில் திரைப்படங்கள் எடுக்கப்படுவது அதிகரித்து வருகிறது (இதில் தான் நம் நக்மா, ரம்பா எல்லாம் இப்போது காலத்தை ஓட்டி வருகின்றனர்).

அதே போல தமிழகத்தில் பேசப்படும் இன்னொரு மொழியில் சினிமா உருவாவது இதுவே முதல் முறை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil