twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மெட்ராஸ் பாஷைக்காகவே காந்திமதிக்கு பதில் மனோராமாவை மாற்றிய கமல்.. அட இது புது தகவலா இருக்கே!

    |

    சென்னை: அபூர்வ சகோதரர்கள் படத்தில் மனோரமாவுக்கு முன்பாக நடித்தது நடிகை காந்திமதி தான்.

    ஆனால், சென்னை பாஷையை சரளமாக பேச வேண்டும் என்பதற்காக கமல் பாதி ஷூட்டிங் முடித்த பிறகு மாற்றிய கதை தெரியுமா?

    முதல் வெர்ஷன் பாடலில் காந்திமதி நடித்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அதை விட சுவாரஸ்யம் ஜனகராஜ் கமலுக்கு அப்பாவாக நடித்துள்ளார் என்பது தான்.

    சூர்யா 42 பூஜைக்கு.. அஜித், விஜய், எலான் மஸ்க் எல்லாம் வந்துருக்காங்களா.. தெறிக்கும் போட்டோ மீம்ஸ்! சூர்யா 42 பூஜைக்கு.. அஜித், விஜய், எலான் மஸ்க் எல்லாம் வந்துருக்காங்களா.. தெறிக்கும் போட்டோ மீம்ஸ்!

    சென்னைக்கு வயது 383

    சென்னைக்கு வயது 383

    மெட்ராஸ் டே இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னைக்கு வயது 383 ஆகிறது. சிங்காரச் சென்னை என்றும் வந்தாரை வாழவைக்கும் நகரம் என்றும் ஏகப்பட்ட பெயர்கள் சென்னைக்கு உண்டு. பல ஊர்களில் இருந்தும் பல நாடுகளில் இருந்தும் மக்கள் சென்னைக்கு வேலை ரீதியாக வசித்து வருகின்றனர். சர்கார் படத்தின் அந்த தக்காளி அரசியல் கதை சொல்லும் காட்சியிலும் அந்த நகரில் உள்ள மொத்த பேரும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் என்பதை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அழகாக படமாக்கி இருப்பார்.

    மெட்ராஸ் பாஷை

    மெட்ராஸ் பாஷை

    செம்மொழியான தமிழ் மொழி முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் வருகை காரணமாக சென்னையில் மெட்ராஸ் பாஷையாக மாறி அதிலும் ஒரு தனி அழகை இத்தனை ஆண்டுகளாக தமிழ் சினிமாவுக்கு வழங்கி வருவது பெருமை தான். அப்படி அந்த மெட்ராஸ் பாஷைக்காகவே நடிகர் கமல்ஹாசன் காந்திமதி நடித்த கதாபாத்திரத்தையே அபூர்வ சகோதரர்கள் படத்தில் மாற்றிய கதை தெரியுமா?

    காந்திமதி தான் முதலில்

    காந்திமதி தான் முதலில்

    அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ மற்றும் ராஜா கைய வச்சா பாடலில் மனோரமாவின் பங்கு அளப்பறியதாக இருக்கும். ஆனால், அவருக்கு முன்னதாக அந்த படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடித்தது நடிகை காந்திமதி தான். ஒரு பாடல் காட்சியெல்லாம் படமாக்கிய பின்னர், திடீரென மெட்ராஸ் பாஷை பேசும் ஒரு நடிகையை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என காந்திமதியை மாற்றி விட்டு மனோரமாவை நடிக்க வைத்தார் கமல். அதற்கு பதில், தேவர்மகன் மற்றும் விருமாண்டி படங்களில் காந்திமதியை நடிக்க வைத்திருந்தார்.

    ராங்கு பண்ணாத

    ராங்கு பண்ணாத

    ராஜா கைய வச்சா பாடலில் "ராங்கு பண்ணாத.. என்கிட்ட ராங்கு பண்ணா அல்லாமே ராங்கா பூடும்" என மெட்ராஸ் பாஷையில் பேசி மிரட்டி இருப்பார் நடிகை மனோரமா. அதே போல அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ பாடலில் காந்திமதி மாதிரி முறைக்காமல் கமலுடன் இறங்கி தர லோக்கலாக குத்தாட்டம் போட்டிருப்பார்.

    அப்பா ரோலில் ஜனகராஜ்

    அப்பா ரோலில் ஜனகராஜ்

    அண்ணாத்த ஆடுறாரு பாடலில் கமல்ஹாசனின் உருவ படத்தை பார்க்கும் போலீஸ் ஜனகராஜ், அது அப்படியே புருவங்கள் முதல் கண்கள் முதல் அத்தனையும் அசைந்து கமலாக மாறி டான்ஸ் ஆடும். ஆனால், முன்னதாக எடுக்கப்பட்ட வெர்ஷனில் கமலுக்கு அப்பா ரோலில் நடித்திருப்பார் கனகராஜ்.

    ஆர்.எஸ். சிவாஜி

    கார்கி படத்தில் அப்பாவாக நடித்து ரசிகர்களை கிளைமேக்ஸில் உலுக்கி எடுத்த அந்த செக்யூரிட்டி ஆர்.எஸ் சிவாஜி தான் ஜனகராஜை சார் நீங்க எங்கேயோ போயிட்டீங்க என உசுப்பேற்றி காமெடியில் ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பார். அந்த ஆர்.எஸ். சிவாஜி முதல் வெர்ஷனில் கமலின் நண்பராக நடித்துள்ளார். மெட்ராஸ் பாஷை என்கிற ஒரே ஒரு விஷயம் ஒட்டுமொத்த படத்தையும், கதை மாந்தர்களையும் அப்படியே மாற்றி அபூர்வ சகோதரர்கள் படம் எப்படி வர வேண்டுமோ அப்படி வர வைத்துவிட்டது.

    English summary
    How Madras language done a major changes in Kamal Haasan's Apoorva Sagodharargal details are here. Initially actress Gandhimathi done the role of Manorama and a song also shot with her circulates in social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X