»   »  ஷங்கர் படத்தில் ஷாருக்!

ஷங்கர் படத்தில் ஷாருக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஷங்கரின் கனவுப் படமான ரோபோட் படத்தில் ஹ்ருத்திக் ரோஷன் நடிக்க மறுத்து விட்டாராம். இதையடுத்து ஷாருக் கானிடம் ஷங்கர் கால்ஷீட் கேட்டுள்ளாராம்.

சிவாஜி படத்தைக் கொடுத்த கையோடு அடுத்த படம் குறித்த சிந்தனைக்குப் போய் விட்டார் ஷங்கர். அவரது நீண்ட கால கனவான ரோபோட் படத்தை இப்போது எடுக்கப் போகிறார். இதற்காக ரூ. 100 கோடி பட்ஜெட்டையும் வகுத்துள்ளார்.

இப்படத்தை முதலில் தமிழில் கமல்ஹாசனை வைத்து எடுப்பதாக இருந்தார் ஷங்கர். ஆனால் என்ன நினைத்தாரோ கமல் அல்லது என்ன நடந்ததோ படம் பாதியிலேயே கைவிடப்பட்டு விட்டது.

இதையடுத்து மற்ற படங்களுக்குப் போய் விட்டார் ஷங்கர். இந்த நிலையில் சிவாஜி முடிந்த நிலையில் தனது ரோபோட்டை தூசி தட்டி எடுத்துள்ளார் ஷங்கர்.

இந்த முறை அஜீத்தை வைத்து ரோபோட்டை ஷங்கர் எடுக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் பிறகு அதில் மாற்றம், ஹ்ருத்திக் ரோஷன் நடிக்கப் போகிறார், படமும் தமிழில் உருவாகவில்லை, இந்தியில்தான் எடுக்கப் போகிறார் ஷங்கர் என்று செய்திகள் வெளியாகின.

ஆனால் கமலைப் போலவே ஹ்ருத்திக் ரோஷனும் ஷங்கரின் கதையைக் கேட்டு எகிறி விட்டாராம். இதையடுத்து தற்போது ஷாருக்கானிடம் கதை சொல்லியுள்ளதாக தெரிகிறது. அவரது கால்ஷீட்டையும் ஷங்கர் தரப்பு கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

ஷங்கர், ஷாருக்கை அணுகியுள்ளதை ஷங்கர் வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் நடிக்க ஆவலாக இருந்தார் ஷாருக். சிவாஜியைப் பார்த்த பின்னர் அது கூடி விட்டதாம்.

இப்போது ஷங்கரே ரோபோட் படத்துக்காக அணுகியிருப்பதால் ஷாருக் கான் ஓ.கே. சொன்னாலும் சொல்லலாம் எனக் கூறப்படுகிறது. ஒருவேளை ஷாருக் இப்படத்துக்கு ஒத்துக் கொண்டால் அதை அவரது சொந்த பட நிறுவனமான ட்ரீம்ஸ் அன் லிமிட்டட் நிறுவனமே தயாரிக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தை முழுக்க முழுக்க ஹாலிவுட்டிலேயே வைத்து இயக்க திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர்.

100 கோடியைத் தாங்குவாரா ஷாருக்?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil