கடலிலிருந்து கவர்ச்சியாக வரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது... பொன்னியின் செல்வன் பூங்குழலி

சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படம் நானூறு கோடிகள் வசூல் செய்ததாக அதன் தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

மேலும் விக்ரம் திரைப்படத்தின் வசூல் சாதனையை கூடிய விரைவில் முறியடிக்கும் என்று நம்பப்படுகிறது

இந்நிலையில் அந்தப் படத்தில் பூங்குழலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்தில் சுவாரசியமான பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

இன்ப அதிர்ச்சி

இன்ப அதிர்ச்சி

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த அத்தனை நடிகர்கள் மீதும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை அவர்கள் பூர்த்தியும் செய்தார்கள். ஆனால் சற்றும் எதிர்பார்க்காதது பூங்குழலி கதாபாத்திரம். அதில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். நந்தினி, குந்தவை கதாபாத்திரங்களுக்கு நிகராக பூங்குழலியையும் பாராட்டி பேசினார்கள்.

மணிரத்னம் ரசிகை

மணிரத்னம் ரசிகை

அடிப்படையாகவே இயக்குநர் மணிரத்னம் அவர்களின் தீவிர ரசிகையான ஐஸ்வர்யா லட்சுமி படப்பிடிப்பின் போது அவருடனேயே சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு பின் நடிப்பாராம். அப்படி இருக்கும் பொழுது படக்குழுவில் இருந்த ஒருவர், ஒரு நாள் தன்னை அழைத்து, நாளை முதல் இதுபோல் நீங்கள் மணி சாருடன் பேச முடியாது. ஏனென்றால் ஐஸ்வர்யா ராய் வந்து விடுவார். இருவரும் இருவர் காலத்திலிருந்து நல்ல நண்பர்கள் என்று கூறினாராம். அவர் கூறியது போலவே ஐஸ்வர்யா ராய் படப்பிடிப்புக்கு வந்ததும் தான் மிகவும் பொறாமை பட்டதாக ஐஸ்வர்யா லட்சுமி கூறியிருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமான்

மூன்றாவது படிக்கும் பொழுது உயிரே படத்தில் இடம் பெற்றிருந்த சய்ய சய்யா பாடலுக்கு ஆடிஷன் நடத்தினார்கள். அதில் கலந்து கொண்டபோது என்னை நிராகரித்து விட்டார்கள். ஆனால் இப்போது ரகுமான் அவர்களின் இசையில் உருவான அலை கடல் பாடலில் நடித்துவிட்டேன். என்னுடன் மூன்றாவது படித்தவர்களிடம் இதனை நான் கர்வமாக கூற விரும்புகிறேன் என்றும் என்னுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்றும் ஐஸ்வர்யா கூறியிருக்கிறார்.

சவாலான காட்சி

சவாலான காட்சி

ஒரு காட்சியில் கடலில் இருந்து மீன் பிடித்தபடி எழுந்து படகில் ஏற வேண்டும். படப்பிடிப்பு நடந்த இடத்தில் கூர்மையான பாறைகள் கடலுக்கு அடியில் இருந்தது. அது மட்டுமின்றி மேலே வரும் பொழுது கையில் வைத்திருக்கும் மீன் நழுவி விடக்கூடாது. தான் அணிந்திருக்கும் உடை செக்ஸியாக தோன்றி விடக்கூடாது என்று எனக்கு விவரிக்கப்பட்டது. இவை அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு அதனை சரியாக செய்து நடிப்பதற்கே சில டேக்குகள் ஆகிவிட்டது என ஐஸ்வர்யா லட்சுமி பொன்னியின் செல்வன் அனுபவங்கள் பற்றி கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X