Don't Miss!
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
விஜய் ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருந்தாலும்.. தனது முதல் கார் ஜெய்ஷங்கரால்தான் கிடைத்தது..நெகிழும் எஸ்ஏசி
சென்னை: நடிகர் ஜெய்ஷங்கரின் உயர்ந்த மனது குறித்து திரையுலகில் அனைவரும் பேசுவார்கள். தான் நடித்தப்படம் ஓடாவிட்டால் சம்பளத்தை குறைத்துக்கொள்ளும் நல்ல மனதுகாரர் என்பார்கள்.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் திரையுலகில் உதவி இயக்குநராக அறிமுகமான முதல் படமே ஜெய்ஷங்கர் நடித்த மனசாட்சி படம்.
பின்னர் கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வந்த சந்திரசேகருக்கு ஜெய்ஷங்கர் முதன் முறையாக கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இதை நெகிழ்வுடன் எஸ்.ஏ.சி குறிப்பிட்டுள்ளார்.
மகன் விஜய் வரல.. மனைவி ஷோபாவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்!

ஜெய்ஷங்கர் படத்தில் உதவி இயக்குநராக எஸ்.ஏ.சி
இன்று எஸ்.ஏ.சந்திரசேகர் பிறந்தநாள். அவர் 1960 களின் இறுதியில் சென்னைக்கு வந்தவர் திரைத்துறையில் ஈடுபட முயற்சி எடுத்துவந்தார். ஆரம்பத்தில் ஜெய்ஷங்கர் நடித்த மனசாட்சி படத்தில் உதவி இயக்குநராக கிளாப் அடிப்பவராக வாழ்க்கையை தொடங்கினார். எம்ஜிஆர், சிவாஜி படங்களில் உதவி இயக்குநர், அசோசியேட் இயக்குநராக பணியாற்றி அனுபவப்பட்டு இயக்குனராக உயர்ந்தார்.

சட்டம் ஒரு இருட்டறை..
எஸ்.ஏ.சி 1978 ஆம் ஆண்டு சினிமா உலகத்திற்கு வந்து 10 ஆண்டுகள் கழித்து 2 படங்களை இயக்கினார் அதில் ஒருபடம் சரியாக போகவில்லை. அடுத்து விஜயகாந்தை வைத்து சட்டம் ஒரு இருட்டறை படம் சிறப்பாக ஓடி எஸ்.ஏ.சிக்கு பெரியளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. விஜய்காந்துக்கும் இது வெற்றிப்படமாக அமைந்தது. எஸ்.ஏ.சிக்கு அடுத்தடுத்த படங்கள் குவிந்தது. தனது வாழ்க்கை நிகழ்வுகள் பற்றி எஸ்.ஏ.சி தனது யூடியூப் சானலான யார் அந்த எஸ்.ஏ.சியில் குறிப்பிட்டுள்ள நெகிழ்வான பதிவு வருமாறு.

மனைவி குழந்தைகளுடன் மோட்டார் பைக்கில்
எஸ்.ஏ.சி இயக்குநராக உயர்ந்தாலும் கார் வாங்கவில்லை. வெளியில் செல்ல இருசக்கர வாகனம் மட்டுமே வைத்திருந்தார். அந்த வாகனத்தில் மனைவி ஷோபா, மகன் விஜய் மற்றும் கைக்குழந்தையான மகளுடன் செல்லும்போது எதிரில் காரில் வந்த நடிகர் ஜெய்ஷங்கர் இதைப்பார்த்துவிட்டார். எஸ்.ஏ.சியை அழைத்த அவர் "என்ன சேகர் இயக்குநராக ஆகி படமெல்லாம் இயக்குகிறீர்கள் இன்னும் கார் வாங்கலையா, இப்படி இருசக்கர வாகனத்தில் குடும்பத்துடன் போவது சேப்டி இல்லையே" எனக்கேட்டுள்ளார்.

ஜெய்ஷங்கர் கொடுத்த புத்தம் புதிய ஃபியட் கார்
அதற்கு எஸ்.ஏ.சி இல்லண்ண அதுக்கு இன்னும் நேரம் வரலைன்னு சொல்லியிருக்கார். அதற்கு ஜெய்ஷங்கர் நோ, நோ நாளைக்கு என்னை வீட்டில் வந்து பாருங்கன்னு சொல்லியிருக்கிறார். மறுநாள் ஜெய்ஷங்கர் வீட்டுக்கு போயிருக்கார் எஸ்.ஏ.சி, ஜெய்ஷங்கர் வீட்டு வாசலில் புத்தம் புது சிவப்பு நிற ஃபியட் பத்மினி கார் நின்றிருந்துள்ளது. எஸ்.ஏசியை பார்த்த ஜெய்ஷங்கர் அவரிடம் கார் சாவியை கொடுத்து எடுத்துட்டுப்போங்கன்னு அனுப்பி வைத்திருக்கிறார்.