For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  காலை மடக்கி ஈசியா நடிச்சிடலாம்.. பிரபுதேவாவுக்கு ஏற்பட்ட பிரச்சனை.. பொய்க்கால் குதிரை சஸ்பென்ஸ்!

  |

  சென்னை: இயக்குநர் சந்தோஷ் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் பொய்க்கால் குதிரை.

  நடிகர் பிரபுதேவா, ஷாம், பிரகாஷ்ராஜ், ஜெகன், ஜான் கொக்கேன் மற்றும் நடிகைகள் வரலட்சுமி ரைசா வில்சன் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தில் நடிக்க பிரபுதேவா சந்தித்த சவால்களை பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது.

  சிம்புவோட படமா.. எல்லாம் வதந்திதாங்க.. முதல்ல சூர்யாதான்.. சுதா கொங்கரா பளீச்! சிம்புவோட படமா.. எல்லாம் வதந்திதாங்க.. முதல்ல சூர்யாதான்.. சுதா கொங்கரா பளீச்!

  பிரபுதேவா - சந்தோஷ்

  பிரபுதேவா - சந்தோஷ்

  ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, இரண்டாம் குத்து, கஜினிகாந்த், தெலுங்கில் 2 படங்களை தொடர்ந்து அவர் இயக்கியுள்ள ஆறாவது திரைப்படம் தான் பொய்க்கால் குதிரை. அதேபோல் கடைசியாக பிரபுதேவா நடிப்பில் மை டியர் பூதம் வெளியானது. அடுத்ததாக தமிழில் யங் மங் சங், பகீரா, ஊமை விழிகள், முசாசி, ஃப்ளாஷ் பேக், ரேக்ளா ஆகிய படங்களிலும் லக்கி மேன் என்கிற கன்னடப் படத்திலும் பணிபுரிகிறார்.

  பொய்க்கால் குதிரை

  பொய்க்கால் குதிரை

  இந்தப் படத்தில் பிரபுதேவா ஒரு கால் இல்லாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது மகளின் படிப்பிற்காக பணம் சேர்த்து வைத்திருக்கும் பிரபுதேவாவிடம் அந்தப் பணத்தை தனக்கு செலவு செய்ய வேண்டாம் உங்களுக்கு ஒரு கால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று மகள் கூற, மகனின் ஆசையை நிறைவேற்றுகிறார். ஒரு கட்டத்தில் மகளை யாரோ கடத்திச் செல்ல அவளை கண்டுபிடிப்பதற்காக பல சவால்களை சந்திப்பது போன்று கதை அமைந்துள்ளது. நடனத்திற்கு பெயர் போன பிரபுதேவா மாஸ்டர் இதில் ஒரு கால் இல்லாமல் நடித்துள்ளதும் வழக்கமாக அடல்ட் ஜானரில் படம் செய்யக்கூடிய சந்தோஷ் இதில் எமோஷனல் கதைக்களத்தை தேர்ந்தெடுத்ததும் படத்தின் பலம்.

  பத்திரிக்கையாளர் சந்திப்பு

  பத்திரிக்கையாளர் சந்திப்பு

  சமீபத்தில் இந்தப் படம் தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது, அதில் அபூர்வ சகோதரர்களின் கமல் ஹாசன் பல சிரமங்களை தாண்டி அதில் நடித்தார். இதில் நீங்கள் எப்படிப்பட்ட சவால்களை சந்தித்தீர்கள் என்று கேள்வி கேட்டபோது ஆரம்பத்தில் காலில் கிரீன் துணி கட்டிக்கொண்டு ஈசியாக நடித்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அது பார்ப்பதற்கு ஒற்றைக்கால் உள்ள மனிதரின் உடல் மொழியாக தெரியாமல் மிகவும் எளிமையாக இருந்தது. அதனால் காலை மடக்கியே படம் முழுவதும் சிரமப்பட்டுதான் நடித்துள்ளேன். அதுவும் சில ஷாட்ஸ் நன்றாக வந்திருந்தாலும் தனக்கு ஒரு கால் இல்லை என்பதை மறந்து இயல்பாக நடந்து நடித்து விடுவேன். பின்னர் இயக்குனர் சுட்டிக் காட்டியவுடன் அதனை திருத்திக் கொண்டதாகவும் மீண்டும் அது போல் தவறு நடக்கக்கூடாது என்று கேரவனிலிருந்து ஸ்பாட்டுக்கு நடந்து செல்லும் போது கூட ஊனமுற்றவர் உடல் மொழியிலேயே தான் இருந்ததாகவும் பிரபுதேவா கூறியுள்ளார்.

  அபூர்வ சகோதரர்கள்

  அபூர்வ சகோதரர்கள்

  அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தின் போது விஷுவல் எஃபெக்ட்ஸ் பெரிதாக வளரவில்லை. அப்போது நடிகர் கமல் ஹாசன், இயக்குநர் சங்கீதம் சீனிவாச ராவ் மற்றும் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் இணைந்து பல யுக்திகளை கையாண்டனர். உதாரணமாக சில காட்சிகளில் காலை மடக்கி நடித்திருப்பார், சில காட்சிகளில் தரைக்கு அடியில் பள்ளம் தோண்டி அந்த பள்ளம் தெரியாதவாறு அதில் இறங்கி முட்டியில் ஷூ அணிந்து நடித்திருப்பார், சில காட்சிகளில் கேமரா ஆங்கில் வைக்கும் பொழுது இடுப்புக்கு மேலே தெரியும்படி ஷாட்டுகள் வைத்திருப்பார் பி சி ஸ்ரீராம். இவ்வாறு பல சவால்களை கமல்ஹாசன் சந்தித்துள்ளார்.

  English summary
  I can wrap by legs and dance but i faced few problems, prabu deva breaking suspense during poikkal kuthirai Movie
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X