For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சூர்யா மீது அந்தளவு பாசம் இல்லை. எனக்கே சூர்யாவை தெரியவில்லை... நடிகர் கார்த்தியின் ஷாக்கிங் statement

  |

  சென்னை: நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக மட்டுமின்றி, நல்ல நற்பண்புகள் கொண்ட நடிகர்களாகவும் அறியப்படுபவர்கள்.

  சினிமாவில் மட்டும் பன்ச் வசனங்கள் பேசிக் கொண்டு வள்ளல் கதாப்பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் மத்தியில் பொது வாழ்க்கையிலும் நற்காரியங்களில் ஈடுபட்டு, தேவைப்படும் போது மக்களுக்கு தேவையான அரசியல் கருத்துகளை தயக்கமின்றி தெரிவிப்பவர்கள்.

  அப்படிப்பட்ட அண்ணன் தம்பிக்கு நடுவிலும் குறும்புத்தனம் இருக்கும் தானே! அவர்களுக்குள் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களை கார்த்தி சமீபத்தில் கூறியுள்ளார்.

  27 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் சூப்பர்ஸ்டார்கள்? பாலிவுட்டில் ஏஆர் முருகதாசுக்கு அடித்த லக்கி சான்ஸ்!27 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் சூப்பர்ஸ்டார்கள்? பாலிவுட்டில் ஏஆர் முருகதாசுக்கு அடித்த லக்கி சான்ஸ்!

  அடி வாங்கும் கார்த்தி

  அடி வாங்கும் கார்த்தி

  சிறு வயது முதலே அண்ணன் சூர்யாவிடம் அடி வாங்குவாராம் கார்த்தி. எப்போதாவது சோர்வாக இருக்கும்போது அண்ணன் சூர்யாவிடம் தண்ணீர் எடுத்துத் தரும்படி கேட்டால், கவுண்டமணி மீது கிரீஸ் டப்பாவை எட்டி உதைக்கும் செந்தில் போல், தன் மீது தண்ணீரை எட்டி உதைத்து குடி என்று சூர்யா கூறுவாராம். இதுவே எனக்கு ஒரு அக்கா இருந்திருந்தால், அந்தச் சமயத்தில் எனக்கு டீ போட்டு குடுத்திருப்பார்கள். அதனால் அக்கா இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கடைக்குட்டி சிங்கம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவை வைத்துக் கொண்டே கார்த்தி மேடையில் பேசியிருப்பார்.

  பள்ளியில் சூர்யாவின் தில்லு முல்லு

  பள்ளியில் சூர்யாவின் தில்லு முல்லு

  பள்ளியில் படிக்கும் காலக்கட்டத்தில், கார்த்திக்கு பள்ளிக்குச் செல்வது பிடிக்கும் என்பதால் முன்னரே கிளம்பி அமர்ந்திருப்பாராம். ஆனால் 8.15 மணிக்கு பள்ளி என்றால் அப்போதுதான் சூர்யா குளிக்கச் செல்வார். பல நேரங்களில் அவரால் தானும் பள்ளிக்கு தாமதமாக சென்றுள்ளதாகவும், பள்ளியில் தாமதமாக வரும் மாணவர்களை தண்டிக்கும் பொறுப்பில் சூர்யா இருந்ததால், லேட்டாக சென்றாலும் அந்த லீடர் பேட்ச்சை எடுத்து சட்டையில் குத்திக் கொண்டு லேட்டாக வந்த மாணவர்களுடன் தன்னையும் சேர்த்து தண்டித்துள்ளதாகவும் கார்த்தி தன்னுடைய பள்ளி நினைவுகளை கூறியுள்ளார்.

  அடி வாங்கிய பருத்திவீரன்

  அடி வாங்கிய பருத்திவீரன்

  வெளிநாட்டிலிருந்து திரும்ப வந்தவுடன் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிக்கப் போவதாக ஒரு செய்தி வந்திருந்தது. அதில் நகரத்து இளைஞனாக தோற்றமளித்த கார்த்தியை பார்த்து, பத்து பேரை அடிக்கக் கூடிய நபராக மாறுங்கள். இல்லையென்றால் கிண்டல் செய்து விடுவார்கள் என்று இயக்குநர் அமீர் கூறினாராம். தன் வாழ் நாளில் அண்ணனிடன் அடி வாங்குவதையே வேலையாக வைத்திருந்த தனக்கு பத்து பேரை அடிக்கக் கூடிய கதாப்பாத்திரம் கிடைத்தது என்று கார்த்தி நகைச்சுவையாக கூறியுள்ளார்.

  Recommended Video

  பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் | ஜெயமோகனின் கதை? *Entertainment
  சுவாரஸ்ய நிகழ்வு

  சுவாரஸ்ய நிகழ்வு

  நந்தா படத்தின் படப்பிடிப்பிற்காக சூர்யா கும்பகோணத்தில் தங்கியிருந்தாராம். அப்போது வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்த கார்த்தி இந்தியா வந்துள்ளார். அதற்கு முன்பு சூர்யா மீது அவ்வளவு பாசமாக இருந்ததில்லை. ஆனால் இந்தியா வந்த அன்றே அண்ணனை பார்க்க வேண்டும் என்று தோன்றியதால் உடனே கும்பகோணம் சென்று விட்டேன். அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குச் சென்று கதவை தட்டியதும், அரை மொட்டையடித்த ஒரு கருப்பான நபர் கதவை திறந்ததாகவும், அது சூர்யாதான் என்று தெரியாமல்"அண்ணன் இல்லையா?" என்று அவரிடமே கேட்டதாகவும் கார்த்தி தன் மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

  English summary
  I dont have much affection with suriya reveals his brother actor karthi
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X