Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எனக்கு சென்னையே வேண்டாம்... இயக்குநர் கௌதம் பளிச் பேச்சு
சென்னை: இயக்குநர் கௌதம் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகியிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
அவரது இயக்கத்தில் ஏற்கனவே உருவாகியிருக்கும் ஜோஸ்வா, துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன.
இந்நிலையில் இயக்குநர் கௌதம் முன்னதாக கொடுத்த பேட்டி ஒன்று தற்சமயம் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.
துணிவாக
இருந்தாலும்
சரி..யாராக
இருந்தாலும்
சரி..தளபதி
தான்
ஃபர்ஸ்ட்..விஜய்
அஜித்
ரசிகர்கள்
மோதல்!

டக் இன்
இயக்குநர் கௌதம் எப்போதுமே தனது சட்டையை டக் இன் செய்து வைப்பதற்கான காரணம் என்ன என்று அந்தப் பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு தனது தந்தை தான் அப்படிப்பட்ட பழக்கத்தை ஏற்படுத்தியதாகவும் வேலை என்று வந்துவிட்டால் டக் இன் செய்த ஷர்ட், ஷூஸ் அணிய வேண்டும் என்று வளர்த்தாராம். அதனால் தன்னை ஷூஸ் இல்லாமல் எங்குமே பார்க்க முடியாது என்று கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் எனக்கு வினோதமான பழக்கம் ஒன்று இருக்கிறது. நான் கதை எழுதும்போது கூட ஷூஸ் அணிந்து கொண்டுதான் எழுதுவேன் என்று கௌதம் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

பிடித்த நகரம்
உங்களுக்கு பிடித்த நகரம் எது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சென்னை என்று சட்டென பதில் அளித்த கௌதம் மேற்கொண்டு இவ்வாறு கூறினார். சென்னையை விட்டு ஒரு மாறுதலுக்காக பலமுறை வேறு ஊர்களுக்கு சென்று தங்கலாம் என்று கிளம்புவேன் ஆனால் சென்னையை விட்டு பிரிய மனம் இல்லாமல் மீண்டும் சென்னைக்கு வந்து விடுவேன் என்று கூறியுள்ளார்.

இறங்கி செய்யணும்
மேலே கூறப்பட்ட செய்திகள் ஒரு பக்கம் இருந்தாலும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியானதற்கு பின்னர் அவர் ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு கொடுத்துள்ள பேட்டி இப்போது இன்னும் வைரலாகியுள்ளது. காரணம் அதில் படங்களை ரெவ்யூ செய்யலாம் ஆனால் ரெவ்யூ என்ற பெயரில் அடுத்தவர் மனம் புண்படும்படி பேசக்கூடாது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ப்ளூ சட்டை மாறனை இறங்கி செய்ய வேண்டும் என்று தனக்கு தோன்றுவதாக கௌதம் கூறி இருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு ப்ளூ சட்டை மாறன் கூறிய பதில் என்ன தெரியுமா?

மேனன் எதற்கு?
கௌதம் கூறியதற்கு பதில் அளிக்கும் வகையில் ப்ளூ சட்டை மாறனும் கௌதம் பற்றி தனது கருத்தை சமூக வலைதளத்தில் கூறியுள்ளார். அதில், சாதிப் பெயர்களை போடுவதை தமிழக மக்கள் தவிர்த்து வரும் நிலையில் தனது சாதி பெயருடன் வலம் வருபவர்தான் கௌதம் மேனன். ஒரு தமிழ் இயக்குநர் கேரளாவிற்கு சென்று அங்குள்ள டிவியில் ஒரு மலையாள திரைப்பட ரெவ்யூவரை இறங்கி செய்வேன் என்று சொன்னால் அவர்கள் சும்மா இருப்பார்களா? ஆனால் கௌதம் வாசுதேவ் மேனன் என்னை இறங்கி செய்கிறேன் என்று சொல்கிறார் என்று பல கேள்விகளை கேட்டு வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.