Don't Miss!
- News
அமெரிக்கா போங்க! தென் கொரியாவில் பிடன் இருக்கும் போதே.. திருப்பி அனுப்பப்பட்ட சீக்ரெட் சர்வீஸ்! ஏன்?
- Sports
"2 சொத்துக்கள் கிடைத்துள்ளது".. ஐபிஎல் 2023 குறித்து தோனி மாஸ் பேச்சு.. ரசிகர்கள் பெரும் நம்பிக்கை!
- Automobiles
இந்தியாவின் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய கங்கனா ரனாவத்.. நாட்டுல இந்த காரை கொஞ்சம் பேருதான் யூஸ் பண்றாங்க!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பலவீனமாக இருக்கும்..
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நண்பன் படம் மாதிரியே 2000-ல ஒரு script வெச்சிருந்தேன்.. இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்த ஆச்சரிய தகவல்
சென்னை: அசுரன் கொடுத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இப்பொழுது சூரி ஹீரோவாக நடிக்கும் விடுதலை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்
அதை தொடர்ந்து பிரபல நாவலை தழுவி சூர்யாவின் நடிப்பில் உருவாகிவரும் வாடிவாசல் படத்தை மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார்
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த வெற்றிமாறன் அதில் நண்பன் படம் மாதிரியே 2000ம் ஆண்டு ஒரு ஸ்கிரிப்ட் வெச்சிருந்தேன் என ஆச்சரிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்
நான் சினிமாவை திருமணம் செய்து கொண்டேன்... மனைவி பெரிதாக தெரியவில்லை.. இயக்குனர் மிஷ்கின்

அசுர இயக்குனர்
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு படங்களும் தரமான வெற்றிகளை பெற்று வருகிறது. பொல்லாதவன், ஆடுகளம்,விசாரணை ,வடசென்னை மற்றும் சமீபத்தில் வெளியான அசுரன் என வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவரும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. குறிப்பாக தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான அசுரன் திரைப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்தது மேலும் இந்திய அளவில் தேசிய விருதையும் வென்றது.

சூரியை ஹீரோவாக
தமிழில் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து அசுரன் திரைப்படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் வெங்கடேஷ் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்தது. இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்து வெளியாகும் திரைப்படத்தை ஒட்டுமொத்த திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க தற்போது சூரியை ஹீரோவாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில்
இதுவரை காமெடியனாக தனது வெள்ளந்தியான பேச்சின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்த நடிகர் சூரி ஹீரோவாக நடித்துள்ள விடுதலை திரைப்படம் முழுக்க முழுக்க சத்தியமங்கலம் காட்டுப் பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகை பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

நண்பன் படம் மாதிரியே ஒரு ஸ்கிரிப்ட்
பிரபலமான நாவல்களை திரைப்படங்களாக இயக்கிவரும் வெற்றிமாறன் அடுத்ததாக வாடிவாசல் படத்தையும் நாவலை மையப்படுத்தி இயக்கி வருகிறார். சூர்யாவின் நடிப்பில் கலைபுலி எஸ் தாணுவின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் மதுரையில் படமாக்கப்பட்டு வருகிறது. ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த வெற்றிமாறன் அதில் 2000ம் ஆண்டு நண்பன் படம் மாதிரியே ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வெச்சிருந்தேன். அதை விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் சார் இடம் சொல்லவும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்பொழுது எனக்கு கதை சரியாக சொல்ல தெரியவில்லை சொதப்பி விட்டேன். என அந்த நேர்காணலில் இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்த இந்த ஆச்சரிய தகவல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.