twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நண்பர்கள் முன்பு கூச்சப்படாம்ல டேபிள் துடைக்கும் வேலை பார்த்துள்ளேன்... எஸ்.ஜே.சூர்யா

    |

    சென்னை: இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு டான் மற்றும் கடமையைச் செய் திரைப்படங்கள் வெளியானது.

    Recommended Video

    SJ Surya Unknown Facts | ஏன் இன்னும் திருமணம் செஞ்சிக்கல? *Celebrity | Filmibeat Tamil

    சென்ற ஆண்டு இறுதியில் வெளியான மாநாடு திரைப்படத்திலும் இந்த ஆண்டு வெளியான டான் திரைப்படத்திலும் அவருடைய நடிப்பு மிகையாக பாராட்டப்பட்டது

    இந்நிலையில் சினிமாவிற்கு வருவதற்கு முன் தான் செய்த வேலைகள் பற்றி எஸ்.ஜே.சூர்யா கூறிய பேட்டி ஒன்று தற்சமயம் வைரலாகியுள்ளது.

     விஜய்யுடன் 3 வது முறையாக கைகோர்க்கும் ஜானி மாஸ்டர்...எந்த படத்தில் தெரியுமா ? விஜய்யுடன் 3 வது முறையாக கைகோர்க்கும் ஜானி மாஸ்டர்...எந்த படத்தில் தெரியுமா ?

     பொம்மை

    பொம்மை

    மொழி திரைப்பட இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் பொம்மை என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் பல மாத காலமாக ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. பிரியா பவானி சங்கருடன் சேர்ந்து நடித்துள்ள இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு டிரெய்லர் மூலம் உண்டானது. காரணம் ஒரு கடையில் இருக்கும் மேனுகுவின் பொம்மையை உண்மை என நம்பி அதனை காதலிக்கும் நபராக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.

     ஆர்.சி.15

    ஆர்.சி.15

    இந்தப் படத்தை தவிர்த்து மார்க் ஆண்டனி, உயர்ந்த மனிதன், இரவாக்காலம் ஆகிய திரைப்படங்களிலும் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கவிருக்கும் தெலுங்கு படத்திலும் எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியிருக்கிறார். நண்பன் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் சங்கர் இயக்கத்தில் அவர் நடிப்பது குறிப்பிடத்தக்கது. அதில் அவர்தான் முக்கிய வில்லன் என்று கூறப்படுகிறது.

     சிறு வயது சூர்யா

    சிறு வயது சூர்யா

    எஸ்.ஜே.சூர்யா குற்றால அருவி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர். அவரின் அப்பா சின்ன சின்னதாக பல பிசினஸ் செய்வாராம். அதன் மூலமாக வறுமை இல்லாத சூழலில்தான் வளர்ந்துள்ளார். ஆனால் அப்பா மிகவும் கண்டிப்பானவராம். குற்றாலம் அருகே இருந்தால் கூட அங்கு ஒருபோதும் இவரை கூட்டிச் சென்றதில்லை என்றும் அந்த வழியில் சென்றால் தூரத்தில் நின்று அதோ தெரிகிறதே அதுதான் அருவி என்று காட்டிவிட்டு அழைத்துச் சென்றுவிடுவாராம். பின்னர் என்றைக்காவது ஒருநாள் செய்தித்தாள்களில் அருவியில் குளித்து இறந்தவர்கள் செய்தி வந்தால் அதனை காண்பித்து பாரு இதனால்தான் உன்னை கூட்டிச் செல்வதில்லை என்று கண்டிப்பாக கூறுவாராம். குஷி திரைப்படத்தில் விஜயகுமார் கதாபாத்திரத்தை தனது அப்பாவை வைத்துதான் வடிவமைத்திருப்பார்.

     டேபிளும் கடவுளும்

    டேபிளும் கடவுளும்

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தவர் சென்னையில் லயோலா கல்லூரியில்தான் படித்து முடித்தார். வீட்டிற்கு தெரியாமல் சினிமாவில் முயற்சியும் செய்து கொண்டிருக்கிறார். அப்போது ஹோட்டல் வேலைகளில் அதிகமாக பணிபுரிந்த சூர்யா முதலில் ஒரு கடையில் பில் போடுவது பிறகு ஒரு கடையில் வேறு வேலை செய்வது என்று இருந்திருக்கிறார். மூன்றாவதாக டேபிள் துடைக்கும் பணியில் ஒரு ஹோட்டலில் சேர்ந்துள்ளார். அப்போது கல்லூரியில் அவருடன் படித்தவர்களே அந்த ஹோட்டலுக்கு வருவார்களாம். எந்த கூச்சமோ தயக்கமோ இல்லாமல் அந்தப் பணியை ட்தைரியமாக அவர்கள் முன் செய்வாராம். காரணம் அந்த டேபிள் துடைப்பதும், தான் இசையமைப்பதும், இயக்குவதும், நடிப்பதும், கடவுளும், தாயும், தந்தையும் தனக்கு ஒன்றுதான். எந்தத் தொழிலாக இருந்தாலும் அதில் உயர்வு தாழ்வு கிடையாது என்று உயரிய கருத்து ஒன்றை அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

    English summary
    இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு டான் மற்றும் கடமையைச் செய் திரைப்படங்கள் வெளியானது. சென்ற ஆண்டு இறுதியில் வெளியான மாநாடு திரைப்படத்திலும் இந்த ஆண்டு வெளியான டான் திரைப்படத்திலும் அவருடைய நடிப்பு மிகையாக பாராட்டப்பட்டது. இந்நிலையில் சினிமாவிற்கு வருவதற்கு முன் தான் செய்த வேலைகள் பற்றி எஸ்.ஜே.சூர்யா கூறிய பேட்டி ஒன்று தற்சமயம் வைரலாகியுள்ளது.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X