எனக்குன்னு ஒரு தகுதி இருக்கு இப்படியெல்லாம் நடிக்க மாட்டேன்.. சரண்யா பொன்வன்னன்!

சென்னை : நாயகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

மனசுக்குள் மத்தாப்பு, என் ஜீவன் பாடுது, அஞ்சலி, உலகம் பிறந்தது எனக்காக என்ற பல படங்களில் நடித்துள்ளார்.

அக்னி பறவை, கோட்டைவாசல், கருத்தம்மா போன்ற பல படங்களில் பெயர் சொல்லும் அளவிற்கு நடித்துள்ளார். மேலும் தான் நடித்த ஒரு காட்சியை குறித்து முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார் சரண்யா பொன்வண்ணன்.

மெகா ஹிட் படங்கள்

மெகா ஹிட் படங்கள்

நாயகன் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சரண்யா பொன்வண்ணன், தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். 80களில் நடிக்க தொடங்கிய நடிகை சரண்யா பொன்வண்ணன் திருமணத்திற்கு முன் மீண்டும் சாவித்திரி என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு 2003 ஆம் ஆண்டு அலை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இதில் சிம்பு, திரிஷா போன்ற பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை எழுதி, இயக்கியவர் விக்ரம் குமார். இந்த படத்தில் சிம்புவுக்கு அம்மாவாக நடித்திருந்தார் சரண்யா.

குணச்சித்திர கதாபாத்திரம்

குணச்சித்திர கதாபாத்திரம்

தற்போது ஹீரோ, ஹீரோயின்களுக்கு அம்மாவாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் நடிகை சரண்யா பொன்வண்ணன் .அருள், ராம், சிவகாசி, தவமாய் தவமிருந்து, எம்டன் மகன், திருவிளையாடல் ஆரம்பம், கிரீடம் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

அஜித், விக்ரம், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி, சசிகுமார், உதயநிதி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் சரண்யா பொன்வண்ணன்.

ஹிட் படங்கள்

ஹிட் படங்கள்

தனுஷுடன் இணைந்து நடித்த திருவிளையாடல் ஆரம்பம்,வேலையில்லா பட்டதாரி, போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடிப்பில் எம்ஜிஆர் மகன், எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்கள் வெளியாகின. தற்போது இவர் நடிப்பில் விருமன், மழை பிடிக்காத மனிதன், இடிமுழக்கம் போன்ற படங்கள் வெளிவர உள்ளது. 2006 ஆம் ஆண்டு திருமுருகன் இயக்கத்தில் வெளியான எம் மகன் படத்தில் உள்ள ஒரு சீனில் தான் நடித்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

வடிவேலு பரத் நாசர் காம்போ

வடிவேலு பரத் நாசர் காம்போ

வடிவேலு மற்றும் பரத் இருவரும் அருகில் இருக்க, சரண்யா குழாயில் வரும் தண்ணீரை எடுத்து மேலே ஊற்றி கொண்டு அங்கபிரதட்சணம் செய்வது போல காட்சி ஒன்று இருக்கும். இவர்கள் மூவரையும் தேடி நாசர் வருவார். அந்தக் காட்சியில் நடிப்பதற்கு சரண்யா பொன்வண்ணன் மிகவும் தயங்கினாராம். மக்கள் அனைவரும் நடந்து செல்லும் அந்த பாதையில், எவ்வாறு நான் அந்த காட்சியில் நடிப்பேன் என்று நடிக்க ஒப்புக் கொள்ளவே இல்லையாம். எனக்குன்னு ஒரு தகுதி இருக்கு நான் எப்படி ரோட்டில் எல்லாம் உருளுவேன் என்று கேட்டுள்ளார். வடிவேலுவும் இவங்க செய்யலைன்னா பரவால்ல சார், நான் அந்த காட்சியை செய்து கொடுக்கிறேன் என்று சொன்னாராம். ஆனால் இயக்குநர் திருமுருகன் இந்த காட்சியை நீங்கள் செய்தால் மட்டுமே நல்லா இருக்கும் என்று தன்னை கன்வின்ஸ் செய்ததாக கூறியுள்ளார்.

வேறு வழி இல்லை

வேறு வழி இல்லை

எப்படி இருந்தாலும் ரோட்டில் நான் உருள மாட்டேன் என்று கூறியுள்ளார் சரண்யா, ஆனால் இயக்குநர் திருமுருகன் சரண்யாவை தனியாக அழைத்துச் சென்று இந்த சீனுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை கூறியுள்ளார். அதன் பிறகு ஒரு மனதாக, வேறு வழி இல்லாமல் நடிக்க ஒப்புக்கொண்டாராம் சரண்யா. ஆனால் அந்த சீன் இவ்வளவு ஹிட்டாகும் என்றும், அந்த காமெடி சீன் இந்த அளவுக்கு ரீச் இருக்கும் என்றும் தான் எதிர்பார்க்கவில்லை என்றும் மனம் திறந்து கூறியுள்ளார் சரண்யா பொன்வண்ணன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X