twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி கூட நடிக்க அவருக்கு தயக்கம். கமல் கூட நடிக்க எனக்கு தயக்கம்... நெப்போலியன் கதை தெரியுமா?

    |

    சென்னை: நடிகர், பாடகர், அரசியல்வாதி, சமூக சேவகர், வியாபாரி என்ற பன்முகங்களை கொண்டவர்தான் நெப்போலியன் என்கிற குமரேசன் துரைசாமி.

    இயக்குநர் பாரதிராஜாவால் அறிமுகமாகி தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தவர் என்ற அந்தஸ்தை பெற்றவர்.

    நடிகர் சங்கத் தேர்தல் நஷ்டத்தில் இருந்தபோது தேர்தலில் போட்டியிட்டு ஜெய்த்தது விஜயகாந்த் அணி. அதில் அவருடன் நெருக்கமாக இருந்து சங்கத்திற்கு லாபம் ஈட்டித் தந்தது சரத் குமார் மற்றும் நெப்போலியன் ஆகிய இருவர்தான்.

     செல்லம்மா பாட்டு உருவாக இப்படி ஒரு காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன்! செல்லம்மா பாட்டு உருவாக இப்படி ஒரு காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன்!

    குமரேசன் நெப்போலியன் ஆன கதை

    குமரேசன் நெப்போலியன் ஆன கதை

    வழக்கமாக தன் படங்களில் அறிமுகமாகும் நடிகர்களுக்கு பெயரை மாற்றி அறிமுகப்படுத்துவார் பாரதிராஜா. அவ்வாறு இவருடைய தோற்றத்தைப் பார்த்து பாரதிராஜா சூட்டிய பெயர்தான் நெப்போலியன். ஆரம்ப காலத்திலேயே ரஜினி, மோகன்லால், நாகார்ஜுனா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் நடித்துவிட்டார். சமீபத்தில் நான்கு ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

    எஜமான் வாய்ப்பு

    எஜமான் வாய்ப்பு

    எஜமான் படத்தில் இவரை வில்லனாக நடிக்க வைக்கலாம் என்று இயக்குநர் RV உதய குமார் அறிவுருத்த, முதலில் ரஜினி தயங்கினாராம். காரணம் அப்போது குறைந்த படங்கள் மட்டுமே நடித்திருந்தார். ரஜினியின் தேர்வு ராதாரவியாக இருந்ததாம். ஆனால், இளம் நடிகருடன் நடித்தால் நீங்களும் இளமையாக தெரிவீர்கள் என்று உதயகுமார் கூறியதால் ரஜினி ஒப்புக் கொண்டாராம். பின்னர் படம் வந்த பிறகு ரஜினி தனது நடிப்பை வெகுவாக பாராட்டினார் என்று நெப்போலியன் தெரிவித்துள்ளார்.

    மருதநாயகம் வாய்ப்பு

    மருதநாயகம் வாய்ப்பு

    முதலில் மருதநாயகம் படத்தில் பிரம்மாண்ட வில்லன் கதாப்பாத்திரத்தில் நெப்போலியனை நடிக்க அழைத்துள்ளார் கமல். அப்போது, நெப்போலியன் ஹீரோவாக பல படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால், அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் பிசினஸ் கெட்டு போய்விடும் என்று யோசிப்பார்களே என்று கூறி நடிக்க மறுத்துவிட்டாராம். அதன் பின்னர், வந்த வாய்ப்பை வேண்டாமென்று சொல்லிவிட்டோமே என்று வருத்தமும் அடைந்துள்ளார். ஆனால், பிற்காலத்தில் விருமாண்டி மற்றும் தசாவதாரம் படங்கள் மூலம் காலத்தால் அழியாத கதாப்பாத்திரங்களை கமல் தனக்கு கொடுத்துவிட்டார் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

    தற்போதைய படங்கள்

    தற்போதைய படங்கள்

    தனது மகனின் உடல் நலக் குறைவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக வெளிநாடு சென்றவர், அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அதனால் எப்போதாவதுதான் அவரை தமிழ்ப் படங்களில் காண முடிகிறது. கடைசியாக கார்தி நடித்த சுல்தான் மற்றும் ஹிப் ஹாப் ஆதி நடித்த அன்பறிவு படங்களில் நடித்திருந்தார். இனி ஆண்டுக்கு ஒரு தமிழ்ப் படத்திலாவது நடித்துவிடுவேன் என்று நெப்போலியன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

    English summary
    I have more Hestiation to act with actor kamalhaasan says Napoleon
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X