»   »  சளைக்காத மாளவிகா

சளைக்காத மாளவிகா

Subscribe to Oneindia Tamil


குத்தாட்டத்திற்கு நான் என்றுமே சளைக்காதவள். எப்படிப்பட்ட குத்துப் பாட்டாக இருந்தாலும் சரி, நான் ரெடி என்கிறார் மாளவிகா.


கல்யாணமாகி, செட்டிலான பின்னரும் கூட மாளவிகாவின் வேகம் குறையவில்லை. எப்படிப்பட்ட கேரக்டராக இருந்தாலும் சரி, ஒத்தப் பாட்டாக இருந்தாலும் சரி, ரெட்டப் பாட்டாக இருந்தாலும் சரி, எதற்கும் நான் தயார் என்று படு தில்லாக பேசுகிறார் மாளவிகா.

வழக்கமாக ஹீரோயின்களுக்கு கல்யாணமானால் முதல் வேலையாக அவர்களை ஒதுக்கி வைத்து விடுவார்கள் தமிழ் சினிமாக்காரர்கள். ஆனால் மாளவிகா விஷயத்தில் இது தலைகீழாக உள்ளது.

கல்யாணத்திற்கு முன்பு வந்ததை விட இப்போதுதான் நிறையப் பட வாய்ப்பு அவரைத் தேடி வருகிறதாம். எல்லாம் ஹீரோயின் வேடத்திற்கும், குத்துப்பாட்டுக்கும்தானாம்.

இதைப் பயன்படுத்தி ஹீரோயின் வாய்ப்புக்கு வாங்கும் அதே சம்பளத்தையே ஒத்தப் பாட்டுக்கும் கேட்கிறாராம் மாளவிகா. அதாவது ஃபிளாட் ரேட்தானாம். தயாரிப்பாளர்களும் மனம் கோணாமல் கொடுத்து மாளவிகாவின் கால்ஷீட்டையும், கிளாமர் பாட்டையும் சமர்த்தாக வாங்கிக் கொள்கிறார்களாம்.

தற்போது ஆறுபடை, மச்சக்காரன், சிங்கக்குட்டி ஆகிய படங்களில் வலுவான குத்தாட்டம் போட்டுள்ளாராம் மாளவிகா. ஹீரோயினாக நடிப்பதை குத்துப் பாட்டுக்கு ஆடுவது ரொம்ப எளிது, வேலை சுலபம் என்பது மாளவிகாவின் கருத்து.

கட்டுவிரியன் படத்தில் இரட்டை வேடத்தில் மிரட்டியிருக்கும் மாளவிகா, எந்த மொழிப் படத்திலும் குத்துப் பாட்டுக்கு ஆட ரெடியாக இருக்கிறாராம்.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். அப்பா, அம்மா அந்தஸ்துக்கு இன்னும் இரண்டு வருடங்கள் கழித்துப் போய்க் கொள்ளலாம் என்று கூறி விட்டாராம் மிஸ்டர் மாளவிகா. இதனால் மாளவிகா அடுத்தடுத்து கால்ஷீட்களைக் கொடுத்து படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறாம்.

இப்படியெல்லாம்மா நீ ஆடினே என்று மகனோ, மகளோ எதிர்காலத்தில் கேட்டு விட முடியாத அளவுக்கு கெளரவமா ஆடிக்கோங்கோ மாளு மேடம்!

Read more about: malavika
Please Wait while comments are loading...