twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மௌன ராகம் திரைப்படத்திற்காக நானும் புரடியூசர்கள் தேடி அலைந்துள்ளேன்... நடிகை ரேவதி ஃப்ளாஷ் பேக்

    |

    சென்னை: 1980-களிலும் 90-களிலும் பலரது கனவு நாயகியாக இருந்தவர் நடிகை ரேவதி. திருமணமான பின்னர்தான் அவர் பல படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

    தமிழக மக்களின் மத்தியில் இன்னும் அவர் நிலைத்து நிற்கிறார் என்றால் அதற்கு காரணம் இயக்குநர்கள் பாரதிராஜா, பாலச்சந்தர் மற்றும் மணிரத்தினம் இயக்கத்தில் அவர் நடித்ததுதான்.

    இந்நிலையில் மௌன ராகம் திரைப்படம் எப்படி உருவானது என்பது பற்றி சுவாரசியமான தகவல்களை ரேவதி கூறியுள்ளார்.

    கரு முட்டையை ஃப்ரீஸ் செய்து வைக்கணும்னு நினைச்சேன்.. சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூர் பேட்டி! கரு முட்டையை ஃப்ரீஸ் செய்து வைக்கணும்னு நினைச்சேன்.. சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூர் பேட்டி!

     பகல் நிலவு

    பகல் நிலவு

    ரேவதி சினிமா துறைக்கு வந்து நடித்துக் கொண்டிருந்தபோது அவரிடம் முதன் முறையாக ஆங்கிலத்தில் ஒரு முழு படத்தின் கதையையும் கூறியது இயக்குநர் மணிரத்தினம் அவர்கள் தானாம். அப்படித்தான் பகல் நிலவு திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்தாராம். அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது மௌன ராகம் திரைப்படத்தின் ஒன் லைனை கூறி இருக்கிறார் மணிரத்னம்.

     முதலில் கார்த்திக் இல்லை

    முதலில் கார்த்திக் இல்லை

    முதலில் அவர் ஒன் லைன் கூறிய போது கார்த்திக் கதாபாத்திரம் எதுவும் கிடையாதாம். திருமணத்தின் மீது ஈடுபாடு இல்லாத பெண்ணை கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணமான இரண்டாவது நாளில் விவாகரத்து கேட்கிறாள். அந்த பெண் ஒரு வருடம் ஒன்றாக வாழ்க்கை நடத்திய பின்னர் தான் விவாகரத்து கிடைக்கும் என்ற சூழலில் எப்படி அவர்களுக்குள் காதல் மலர்ந்து ஒன்று சேர்கிறார்கள் என்பதுதான் முதலில் சொல்லப்பட்ட கதையாம். அப்போது அதில் கார்த்தி கதாபாத்திரமோ சந்திரமௌலி நகைச்சுவை காட்சிகளோ இல்லையாம்.

     பிடிவாதமாக கூறிய ரேவதி

    பிடிவாதமாக கூறிய ரேவதி

    பகல் நிலவு ஷூட்டிங் ஸ்பாட்டில் மணிரத்னம் கூறிய அந்தக் கதையைக் கேட்டவுடன் எப்போது அந்த படத்தை எடுத்தாலும் தான்தான் அதில் கதாநாயகியாக நடிப்பேன் என்று பிடிவாதமாக கூறிவிட்டாராம். அதேபோல மௌன ராகம் திரைப்படத்தை தயாரிப்பாளர்களிடம் மணிரத்னம் கூறியபோது மோகன் மற்றும் ரேவத்தியை வைத்துதான் கதையை கூறினாராம். கதையை கேட்ட பல தயாரிப்பாளர்கள் படம் ஓடாது என்று அப்போது நிராகரித்துள்ளார்கள்.

     ரேவதியின் முயற்சி

    ரேவதியின் முயற்சி

    ஒரு கட்டத்தில் ரேவதியும் மணிரத்தினத்திற்காக தயாரிப்பாளர்களை சந்தித்ததாகவும் கடைசியில் யாரும் அந்த படத்தை தயாரிக்க முன்வராததால் மணிரத்தினத்தின் அண்ணன் ஜி.வெங்கடேஷ்வரன் அந்த படத்தை தயாரித்தார் எனவும் ரேவதி அந்தப் பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளார். இன்றுவரை ரேவதி நடித்த படங்களிலேயே மௌன ராகம் முக்கியமான படமாக கருதப்படுகிறது.

    English summary
    Actress Revathi was the dream heroine of many in the 1980s and 90s. After her marriage, she acted as the heroine in several films. In this case, Revathi has told interesting information about how the movie Mouna Ragam was Completed.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X