ஸ்கூல் படிக்கிறப்ப இந்த நடிகை பாக்குறதுக்காகவே ஹோட்டலுக்கு போவேன்...கார்த்தி சொன்ன செலிபிரிட்டி யார்?

சென்னை: நடிகர் கார்த்தியின் நடிப்பில் பொன்னியின் செல்வன் மற்றும் விருமன் திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இப்போது PS.மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

விருமன் திரைப்படத்தில் இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். முதன் முறையாக முத்தையா படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவ்விறு காரணங்களால் படத்திற்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு உண்டாகியுள்ளது.

இந்நிலையில் கார்த்தி கொடுத்துள்ள ஒரு பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் பல்வேறு கேள்விகளுக்கு சுவாரசியமான பதில்களை கொடுத்துள்ளார்.

கல்லூரியில் ராகிங்

கல்லூரியில் ராகிங்

கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்த போது, தான் நடிகர் சிவக்குமாரின் மகன் என்று தெரிந்ததும், தன்னை சட்டை பட்டனை கழட்டிவிட்டு "தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்" பாடலுக்கு ஆடும்படி ராகிங் செய்ததாகவும், தனது தந்தை சிவக்குமார் நடனம் ஆடத் தெரியாமலேயே அந்தக் காலக்கட்டத்தில் சமாளித்ததாகவும், அதனை வீட்டில் கிண்டல் செய்வேன் எனவும் கார்த்தி கூறியுள்ளார்.

அமலா மீது கிரஷ்!

அமலா மீது கிரஷ்!

தன் தந்தை சிவக்குமாருடன் நடித்த நடிகைகளில் தனக்கு மிகவும் பிடித்த நடிகை அமலா எனவும், தான் பள்ளியில் படிக்கும்பொழுது அமலா ஒரு உணவகத்தை சென்னையில் நடத்திக் கொண்டிருந்ததாகவும், உணவு வாங்கும் சாக்கில் அமலாவை அடிக்கடி சென்று வேடிக்கை பார்த்ததாகவும் கூறியுள்ளார். அது மட்டுமின்றி சமீபத்தில் அமலாவை நேரில் சந்தித்தபொழுது, சிறு வயதில் நீ என் ஹோட்டலுக்கு வருவாய், ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டதாகவும், தான் ஒன்றும் தெரியாதது போல் நின்றதாகவும் கார்த்தி அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

சிம்ரனா அல்லது ஜோதிகாவா

சிம்ரனா அல்லது ஜோதிகாவா

சிம்ரன் பிடிக்குமா அல்லது ஜோதிகா பிடிக்குமா என்று ஆன்கர் கேட்ட கேள்விக்கு தனது அண்ணி ஜோதிகாவின் நடிப்புதான் பிடிக்கும். மொழி திரைப்படம் ஒன்று போதும் அவர்களின் திறமையை நிரூபிக்க. வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு விலகவில்லை. போதும் என்றுதான் தனது அண்ணி நடிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்து கொண்டதாக கார்த்தி தெரிவித்துள்ளார்.

அம்மாவின் கண்டிஷன்

அம்மாவின் கண்டிஷன்

நடிக்க வந்த புதிதில் எந்தப் பெண்ணையும் காதலிக்கக் கூடாது என்று ஒரு கண்டிஷன் போட்டுதான் அம்மா தான் நடிப்பதற்கு சம்மதித்ததாகவும், ஆறு ஆண்டுகளாக தனக்கு பெண் பார்த்து யாரும் செட் ஆகாததால் ஒரு கட்டத்தில், யாரையும் காதலிக்கிறாயா என்று கேட்டதாகவும், இதை முன்னரே சொல்லியிருந்தால் இந்நேரம் ஒரு பெண்ணை காதலித்து வீட்டிற்கு அழைத்து வந்திருப்பேன் என்று ஆதங்கப்பட்டதாகவும் கார்த்தி அந்தப் பேட்டியில் கலகலப்பாக பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X