twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உன் பேச்ச கேட்டா என் உசுரு போய்டும்...சத்யராஜ் சொன்னதுக்கு விஜயகாந்த் விழுந்து விழுந்து சிரிச்சாரு

    |

    சென்னை: என்பதுகளில் ரஜினி, கமலை தவிர்த்து கொடிகட்டிப் பறந்த நடிகர்கள் என்றால் அது விஜயகாந்த் மற்றும் சத்யராஜ்தான். இன்னும் சொல்லப் போனால் கமல் ஹாசனை விட விஜயகாந்திற்கு ரசிகர்கள் அதிகம் என்று கூட ஒரு பேச்சு உண்டு.

    நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது நஷ்டத்திலிருந்ததை மீட்டு லாபத்தில் கொண்டு வந்து நிறுத்தியவர் விஜயகாந்த். எந்த நடிகருக்கு பிரச்சனை என்றாலும் உடனே சென்று உதவி செய்வாராம்.

    இப்போது யூடியூபில் பல சினிமா பிரபலங்கள் அவரை பாராட்டி பேசுவதை காண முடியும். தன் சம்பளத்தில் பணத்தை எடுத்து அதனை வைத்து ஷூட்டிங் வரும் அனைவருக்கும் ஒரே உணவுதான் போட வேண்டும் என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பாணியில் வாழ்ந்தவர்.

    சுர்யா - சுதா கொங்கரா இணையும் படத்தில் துல்கர் சல்மான்...தீயாய் பரவும் பரவும் தகவல் சுர்யா - சுதா கொங்கரா இணையும் படத்தில் துல்கர் சல்மான்...தீயாய் பரவும் பரவும் தகவல்

    சத்யராஜுக்கு பாராட்டு

    சத்யராஜுக்கு பாராட்டு

    நடிகர் சத்யராஜ் சினிமாவிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆன சமயம் அவருக்கு பாராட்டு விழா ஒன்று நடந்தது. அதில் கலந்து கொண்ட விஜயகாந்த்,"எங்களுக்கு அப்புறம் சினிமாவுக்கு வந்தவங்க பெருசா யாரும் கஷ்டப்படல. நானும் சத்யராஜும் ஒவ்வொரு ஆஃபீஸா ஏறி எறங்கி பராசக்தி, கட்ட பொம்மன் வசனங்கள எல்லாம் பேசி நடிச்சி காமிச்சி வாய்ப்பு தேடுவோம். உண்மைய சொல்லணும்னா, நா கூட உளறுவேன். ஆனா சத்யராஜ் சூப்பரா பேசுவாரு. 25 இல்ல இன்னும் பல ஆண்டுகள் அவர் நடிச்சிக்கிட்டே இருக்கணும்" என்று பேசியிருப்பார்.

    விஜயகாந்தின் கூற்று

    விஜயகாந்தின் கூற்று

    ஆம் விஜயகாந்த் கூறியது உண்மைதான். என்பதுகளில் ஜொலித்த கதாநாயகர்களில் பிரபு, கார்த்திக் உள்ளிட்டோர் வாரிசு நடிகர்களாக சுலபமாக ஹீரோவாகிவிட்டார்கள். விஜயகாந்த் சத்யராஜ் மட்டும்தான் வாய்ப்பு தேடி அலைந்து முன்னேறினார்கள். அது மட்டுமின்றி பல ஆண்டுகளுக்கு முன்பு மேடையில் விஜயகாந்த் பாராட்டியது போலவே இன்னமும் கட்டப்பா போன்ற கதாப்பாத்திரங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார் சத்யராஜ்.

    விஜயகாந்த் பற்றி சத்யராஜ்

    விஜயகாந்த் பற்றி சத்யராஜ்

    சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய சத்யராஜ், ஒரு முறை வள்ளல் என்ற படத்தை எடுத்துவிட்டு ரிலீஸ் செய்ய முடியாமல் தான் திணறிய காலத்தில், அந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்று தாமாகவே முன் வந்தவர்தான் விஜயகாந்த், உண்மையைச் சொல்லப் போனால் அவர் படத்துக்கு வைக்க வேண்டிய "வள்ளல், மக்கள் என் பக்கம்" போன்ற தலைப்புகளை என் படங்களில் வைத்துவிட்டேன் என்று சத்யராஜ் மனமார்ந்து கூறியுள்ளார்.

    யானை கதை

    யானை கதை

    ஈட்டி என்ற படத்தில் விஜயகாந்திற்கு வில்லனாக நடித்தார் சத்யராஜ். அப்போது, ஒரு காட்சியில் யானை சத்யராஜை துரத்தும்போது, விஜயகாந்த் அவரை காப்பாற்றுவாராம். ஷூட்டிங்கில் யானை துரத்தவில்லையாம். அப்போது,"வெள்ளத்தை யானைக்கு காட்டிவிட்டு ஓடுங்கள். அது வெள்ளத்திற்காக உங்களை துரத்தும். அப்போது அதனை தூக்கி எரிந்துவிட்டு ஓடுங்கள்" என விஜயகாந்த் யோசனை கூறினாராம். அதற்கு,"எல்லாம் சரிதான் விஜி. நா வெள்ளத்த அதுகிட்ட தூக்கி போடுறத யான பாக்கலன்னா என் கத என்னாவுறது?" என்று கேட்க சூட்டிங் தாமதமாகும் அளவிற்கு விஜய்காந்த் விழுந்து விழுந்து சிரித்தாராம்.

    English summary
    I will die if I hear your speech, Sathyaraj Said to Vijayakanth in Humour Sense
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X