twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிம்பு, தனுஷை வைத்து "பேஸ் ஆஃப்" ஸ்டைலில் ஒரு படம்.. இயக்குனர் வெங்கட் பிரபுவின் மாஸ்டர் பிளான்

    |

    சென்னை: இயக்குனர் வெங்கட் பிரபுவின் வித்தியாசமான ஸ்டைலில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன

    வெங்கட் பிரபு சிம்பு கூட்டணியில் கடைசியாக வெளியான மாநாடு திரைப்படம் தமிழில் பிரமாண்ட வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்போது தெலுங்கில் இந்தப் படம் தயாராகி வருகிறது

    இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் சிம்பு தனுஷை ஒன்றாக இணைத்து பேஸ் ஆஃப் மாதிரி ஒரு படம் பண்ணனும் என தனது விருப்பத்தை பகிர்ந்துள்ளார்.

    பாகுபலி 2 வசூலை தமிழ்நாட்டில் ரஜினி, அஜித், விஜய் முறியடிப்பாங்கன்னு பார்த்தா.. கமல் கலக்கிட்டாரே!பாகுபலி 2 வசூலை தமிழ்நாட்டில் ரஜினி, அஜித், விஜய் முறியடிப்பாங்கன்னு பார்த்தா.. கமல் கலக்கிட்டாரே!

    கிரிக்கெட் விளையாட்டை மையமாக

    கிரிக்கெட் விளையாட்டை மையமாக

    கலகலப்பான திரைப்படங்களுக்கு பெயர்போன இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பிரம்மாண்ட வெற்றி பெற்று வருகிறது. ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து பின் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த வெங்கட் பிரபு இப்போது முழுநேர இயக்குனராக மாறியுள்ளார். சென்னை 600028 என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். சென்னை 600028 திரைப்படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்களே நடித்திருந்தாலும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமும் வெளியாகி வெற்றி பெற்றது.

    அஜித்தை நெகட்டிவ் ரோலில்

    அஜித்தை நெகட்டிவ் ரோலில்

    இந்நிலையில் அஜித்தின் 50வது திரைப்படமாக மங்காத்தாவில் அஜித்தை நெகட்டிவ் ரோலில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் காட்டி மிரட்டி இருந்தார். மங்காத்தா திரைப்படம் அந்த ஆண்டு பிக்கஸ்ட் பிளாக்பஸ்டர் திரைப்படமாக கொண்டாடப்பட்டது. அடுத்ததாக இயக்கிய பிரியாணி,மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத் தரவில்லை.

    தெலுங்கில் ரீமேக்

    தெலுங்கில் ரீமேக்

    இதுவரை கலகலப்பான காமெடி படங்களை மட்டுமே இயக்கி வந்த வெங்கட் பிரபு அதில் இருந்து சற்று விலகி டைம் லூப் பாணியில் வித்தியாசமான முயற்சியில் இயக்கிய திரைப்படம் மாநாடு. சிம்பு நடிப்பில் வெளியான இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக மிரட்டியிருப்பார். கல்யாணி பிரியதர்ஷன்,கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருக்க தமிழில் மிகப்பெரிய வெற்றிபெற்ற மாநாடு திரைப்படம் இப்பொழுது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. நடிகர் நாக சைதன்யா தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வெங்கட்பிரபு இந்தப் படத்தை இயக்குகிறார்.

    சிம்பு, தனுஷை பேஸ் ஆஃப் மாதிரி

    சிம்பு, தனுஷை பேஸ் ஆஃப் மாதிரி

    இவ்வாறு தனது ஒவ்வொரு படங்களிலும் புது புது முயற்சிகளை செய்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபு தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் சிம்பு, தனுஷை ஒன்றாக வைத்து பேஸ் ஆஃப் மாதிரி ஒரு படம் பண்ண வேண்டும் என ஆசையாக உள்ளது என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.தமிழ் திரையுலகில் சக போட்டியாளராக கருதப்படும் தனுஷ் மற்றும் சிம்பு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் பேஸ் ஆஃப் மாதிரி ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்கும்போதே வேற லெவலில் உள்ளது. ஆனால் வெங்கட்பிரபுவின் இந்த ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    English summary
    I would like to direct a Face-App Like Movie with Simbu and Dhanush Says Venkat Prabu
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X