Don't Miss!
- News
அவசரப்படாதீங்க அண்ணே.. எடப்பாடிக்கு போன "அட்வைஸ்".. புதிய கூட்டணியை கைவிட்டது ஏன்? என்ன நடந்தது?
- Sports
ஓ இதுதான் ட்ரிப்பிளா திருப்பி குடுக்குறதா? சோதித்து பார்த்த நியூசி,.. சூர்யகுமார் தரமான பதிலடி!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க பணத்தை கையாளுவதில் கில்லாடிகளாம்... இவங்களுக்கு எப்பவும் பணக்கஷ்டம் வராதாம்...!
- Technology
பச்சையாக டீஸ் செய்து காட்டிய OnePlus.! ஆஹா..ஓஹோனு ஒன்னுமில்லை.. ஆனா ஹைப் எகுறுது.!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
’வில்லன் நடிகர்களின் அடையாளம்’...ரகுவரன் எழுச்சியும் வீழ்ச்சியும்
தமிழக திரைப்படத்துறையில் பல வில்லன் நடிகர்கள் வந்துள்ளனர், முத்திரைப்பதித்துள்ளனர். ஆனால் ரகுவரன் எப்போதும் பேசப்படுகிறார். அது ஏன் என பார்த்தபோது அவரது வித்தியாச நடிப்பு அவரை உயர்த்தி காட்டியுள்ளது. மிக அற்புதமான நடிகர் மிகவும் போராடி உச்சத்தில் வந்தவர் இளம் வயதில் மரணமடைந்த சோகமும் நடந்தது. இன்று அவரது பிறந்தநாள்.
மூக்கறுத்து
ஊறுகாய்
போட்ருவேன்னு
சொன்னா..
தாமரையை
தரமாக
கலாய்த்த
கமல்..
பிரியங்கா
ஹேப்பி!

வில்லனாக முத்திரைப்படைத்த ஹீரோக்கள்
நடிகர்களில் ஹீரோக்களாக நடிப்பவர் பலர் இருந்துள்ளனர் அது சுலபமான ஒன்று என்பார்கள், பல ஹீரோக்கள் வில்லன்களாக நடித்து முத்திரைப்பதித்து ஹீரோக்களாக ஆனவர்கள் உண்டு. நடிப்புக்கே இலக்கணம் வகுத்த சிவாஜி ஹீரோவாக அறிமுகமானாலும் கூண்டுக்கிளி, திரும்பிப்பார், துளிவிஷம், அந்தநாள் உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றார். தான் இருவேடங்கள் ஏற்ற உத்தமபுத்திரன் படத்தில் ஒரு கேரக்டர் வில்லனாக வந்து அசத்துவார்.

வில்லனாக வாழ்க்கையை ஆரம்பித்த ரஜினி, சத்யராஜ்
இதேபோல் ரஜினிகாந்த், சத்யராஜ், கார்த்திக் என பலரையும் வரிசைப்படுத்தலாம். ஆனால் அவர்கள் ஹீரோவாக என்னதான் சிறப்பாக நடித்தாலும் வில்லத்தனமான நடிப்பு மிக அற்புதமாக இருக்கும். காரணம் மிகவும் கடினமாக நடிப்பது வில்லன் மற்றும் காமெடி பாத்திரங்களே. இதை கமல்ஹாசன் பல முறை சுட்டிக்காட்டியுள்ளார்.

மிரட்டி உடல் மொழியில் மிரட்டுவது தான் வில்லன் வேடமா?
அந்த வில்லன் நடிப்பை பலரும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கோரமாக முகத்தை வைத்து நாக்கை துருத்தி கண்ணை உருட்டி நடித்திருப்பதை பார்த்துள்ளோம். சிலருக்கு அது மேனரிசமாக பொருந்தியது. உதாரணம் வீரப்பாவின் சிரிப்பு, நம்பியாரின் கைகளை பிசையும் மேனரிசம் போன்றவை.

அழகான வில்லன் ரஜினிகாந்த்
ஆனால் வில்லனாக வித்தியாசமாக தனி குரலில் வித்தியாசமாக நடித்து ரசிகர்களின் நெஞ்சை அள்ளியவர் ரகுவரன். பாலாக்காட்டைச் சேர்ந்த ரகுவரனின் குடும்பம் சிறுவயதிலேயே கோவையில் குடியேற பள்ளிப்படிப்பை கோவையில் முடித்தார். கல்லூரியில் படிக்கும் போதே கன்னட படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் அதைக்கண்டு கவலைப்படாமல் திரைப்படக்கல்லூரியில் சேர்ந்து நடிப்புப் பயிற்சி பெற்றார்.

நாடகம், திரைப்படக்கல்லூரியில் பயிற்சி வாழ்க்கை
பின்னர் நடிகர் நாசருடன் சேர்ந்து நாடகத்தில் நடித்து வந்த அவர் முதன் முதலாக கதாநாயகனாக ஏழாவது மனிதன் என்கிற படத்தில் அறிமுகமானார். உயர்ந்த உருவம் ஒடிசலான தேகத்துடன் அறிமுகமான ரகுவரன் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அந்தப்படம் வெற்றிப்பெறாவிட்டாலும் பாரதியார் பாடல்களை வித்த்யாசமாக பயன்படுத்தியதால் அனைவரிடமும் பிரபலமானது.

சம்சாரம் அது மின்சாரம் ரகுவரனின் கலக்கல் நடிப்பு
அடுத்து ரகுவரனுக்கு கிடைத்த படம் ஒரு ஓடை நதியாகிறது என்கிற படம் சுமாராக போனது. ஆனால் உண்மையான ரகுவரன் வெளிப்படவில்லை. சில்க் சில்க் சில்க் ரகுவரனை லேசாக அடையாளம் காட்டியது. அதன் பின்னர் அவருக்கு பெயர் வாங்கிக்கொடுத்தப் படம் சம்சாரம் அது மின்சாரம். விசுவுக்கு இணையான பாத்திரம் இருவர் நடிப்பால் படம் ஹிட்டானது. ரகுவரனுக்கு புகழைக்கொடுத்தது.

பிரபல வில்லன் நடிகராக அவதாரம்
அதே ஆண்டில் மிச்டர் பாரத் படத்தில் வில்லனாக நடித்தார். ஆனால் சத்யராஜ், ரஜினியின் போட்டிப்படம் என்பதால் அவ்வளவாக எடுபடவில்லை. ஆனால் அடுத்தடுத்த வருடங்களில் தனது ஒடிசலான தேகத்தை வைத்து மாடுலேசன், உடல் பாவத்தை வைத்து ஹீரோவிடம் பேசும் வசனத்தால் வெற்றிப்பெற்றார். ரகுவரனின் குரல் மற்றும் அவரது உடை அணியும் பாணி அவருக்கு வித்தியாச வில்லன் என்கிற பெயரை பெற்றுத்தந்தது.

ரஜினிக்கு இணையாக வில்லன் நடிப்பு
அழகான வில்லன்களாக சத்யராஜ், நிழல்கள் ரவியுடன் கலக்கியிருப்பார். அவர் நடிப்புக் கலைக்காக எடுத்த பயிற்சி, நாடத்தில் நடித்த அனுபவம் அவருக்கு மிகப்பெரிய தளத்தை அமைத்து கொடுத்தது. கூட்டுப்புழுக்கள் படத்தில் அவரது நடிப்பு அதற்கு உதாரணம். ரஜினிக்கு இணையாக வில்லனாக சிவா, ஊர்க்காவலன், முத்து, பாட்சா, மனிதன், ராஜா சின்ன ரோஜா போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

மாறுபட்ட உச்சரிப்பில் கலக்கிய ரகுவரன்
ரகுவரனின் நடிப்பில் மக்களை கவர்ந்த முக்கியமான கேரக்டர் அவர் முதல்வராக நடித்த முதல்வன் படம். ஒரு நாள் ஒரே ஒரு நாள் நீ முதல்வராக இருந்துப்பார் என்று பேசும் அந்தக்காட்சி மிகப்பிரபலம். அதேப்போன்று புரியாத புதிர் படத்தில் ஐ நோ, ஐ நோ, ஐயம் சாரி ஐயம் சாரி என்கிற வார்த்தையை பல முறை மாடுலேசன் மாற்றி உச்சரித்தது பொதுமக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.

ஃபங்க் ஹேர்ஸ்டைல், அழகான கோட்டு சூட்டு போட்ட வில்லன்
வில்லன்களில் ஃபங்க் ஹேர் ஸ்டைலில் வந்து கலக்கியவர் ரகுவரன். அமர்க்களம், லவ் டுடே போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் கலக்கினார். அவருக்கு இசையும் நன்றாக வரும். இசை ஆல்பத்தையும் வெளியிட்டுள்ளார். ஒரு காலத்தில் தீவிர வில்லனாக நடித்து மிரட்டிய ரகுவரன் கடைசியாக தனுஷின் தந்தையாக யாரடி நீ மோகினி படத்தில் நடித்திருந்தார். அவர் மறைவுக்குப்பின் அந்தப்படம் வெளி வந்தது. கந்தசாமி படத்தில் நடிக்கும்போதே மறைந்தார்.

சோகமாக முடிந்த ரகுவரனின் வாழ்க்கை
அழகாக ஆரம்பித்த ரகுவரனின் வாழ்க்கை சோகமாக முடிந்தது. அவருக்கு ரோகினி என்கிற மனைவியும் ஒரு மகனும் உண்டு. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து ஆன நிலையில் மது, சிகரெட் என வாழ்க்கை கழிந்த நிலையில் தனிமையில் வாழ்ந்த அவர் அன்புக்காக ஏங்கி மறைந்தது சோகம். காலம் பல கடந்தாலும் நல்ல கலைஞனாக பல்வேறு பாத்திரங்களை ஏற்று முத்திரைப்படைத்த ரகுவரன் எப்போதும் மக்கள் மனதில் வாழ்வார்.