»   »  இளையராஜா.... இந்தியாவிலேயே அதிக விருதுகள் பெற்ற இசையமைப்பாளர்!

இளையராஜா.... இந்தியாவிலேயே அதிக விருதுகள் பெற்ற இசையமைப்பாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசைத் துறையில் அதிகபட்ச தேசிய விருதுகளை வென்ற ஒரே இசையமைப்பாளர் இளையராஜாதான்.

இதுவரை 5 முறை அவர் தேசிய விருதுகளை வென்றுள்ளார். மூன்று படங்களுக்கு பொதுவான இசையமைப்பாளருக்குரிய விருதினையும், இரு படங்களுக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருதுகளையும் வென்றுள்ளார்.

சாகர சங்கமம்

சாகர சங்கமம்

சலங்கை ஒலி என்ற பெயரில் தமிழில் வெளியான படம் இந்த சாகர சங்கமம். கே விஸ்வநாத் இயக்கத்தில் கமல் - ஜெயப்ரதா நடித்த தெலுங்குப் படம். இந்தப் படத்தின் இரு ஹீரோக்கள் இளையராஜாவும் கமல் ஹாஸனும்.

வான் போலே வண்ணம் கொண்டு..., தகிட ததிமி, மௌனமான நேரம், நாத விநோதங்கள்... என இளையராஜா இசையில் வெளியான அத்தனைப் பாடல்களும் இந்திய திரையுலகயே தென்னகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தன. முதல் தேசிய விருதினைப் பெற்றார் இசைஞானி!

சிந்து பைரவி

சிந்து பைரவி

சிறந்த இசைக்கான விருது தெலுங்குப் படத்துக்குக் கிடைத்தாலும் தமிழில் கிடைக்கவில்லையே என்ற இளையராஜாவின் ஏக்கத்தைத் தீர்த்தது கே பாலச்சந்தரின் இயக்கத்தில் வந்த சிந்து பைரவி. கர்நாடக இசையில் இளையராஜா செய்த புரட்சி இந்தப் படம் என்று அடிக்கடி சொல்வார் கே பாலச்சந்தர். அத்தனைப் பாடல்களும் இசை ஆச்சர்யங்களாய் காலத்தை வென்று நிற்கின்றன!

ருத்ர வீணை

ருத்ர வீணை

இந்தப் படம் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியானதுதான். தமிழில் உன்னால் முடியும் தம்பி என்ற பெயரில் வெளியானது. கமல் ஹாஸன், ஜெமினி கணேசன், சீதா நடித்திருந்த இந்தப் படத்திலும் சாஸ்திரிய இசையின் மரபுகளை உடைத்து புதிய சங்கீதம் படைத்திருந்தார் ராஜா. அதைப் பாராட்டும் வகையில் படத்திலேயே ஒரு வசனமும் வைத்திருப்பார் கேபி. அந்தப் பாடல்தான் 'புஞ்சை உண்டு நஞ்சை உண்டு...'

பழஸி ராஜா

பழஸி ராஜா

இளையராஜாவின் இசையில் வெளியான மலையாளப் படம். இதே பெயரில் தமிழிலும் வெளியானது. ஹரிஹரன் இயக்கிய இந்தப் படத்தில் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது இளையராஜாவுக்குக் கிடைத்தது. படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெற்றிருந்தன. ஆறுமே அற்புதமான பாடல்கள். பாடல்களுக்கும் சேர்த்து விருது வழங்காத ஆதங்கம் இருந்தது ராஜாவுக்கு.

தாரை தப்பட்டை

தாரை தப்பட்டை

இந்த ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பில், பாலாவின் தாரை தப்பட்டை படத்துக்காக மீண்டும் சிறந்த பின்னணி இசைக்கான விருதை இளையராஜாவுக்கு வழங்கியது மத்திய அரசு. இந்தப் படத்திலும் பாடல்கள் சிறப்பாக வந்திருந்தன. குறிப்பாக 'என்னுள்ளம் கோவில்...' அந்தப் பாடலுக்கு சிறந்த இசைக்கான விருது கிடைக்கும் என்று பாலா எதிர்ப்பார்த்தார்.

பிரிக்காதீர்கள்

பிரிக்காதீர்கள்

இனி சிறந்த பாடல், பின்னணி இசை என்று பிரித்து விருது தரவேண்டாம் என்றும் எப்போதும் போல சிறந்த இசை என்று ஒரு விருது தரவேண்டும் என்றும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார் இளையராஜா.

English summary
Ilaiyaraaja is the highest National Award winning composer in India. Here is a compilation of his awards winning movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil