»   »  காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்- ராஜாவின் "காதலை" கொண்டாடும் ரசிகர்கள்

காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்- ராஜாவின் "காதலை" கொண்டாடும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசைஞானி இளையராஜா சினிமாவிற்கு வந்து 40 வருடங்கள் நிறைவு பெற்றதை ட்விட்டரில் #40YrsOfMaestroILAYARAJA என்ற ஹெஷ்டேக்கை போட்டு கொண்டாடி வருகின்றனர் ராஜாவின் ரசிகர்கள்.

1௦௦௦ படங்கள் மற்றும் 5௦௦௦ பாடல்கள் என்று சாதனை படைத்திருக்கும் ராஜாவின் இசையை கேட்டு வளர்ந்ததை நாங்கள் பெருமையாக நினைக்கிறோம் என்று பல தரப்பினரும் ராஜாவின் இசையை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ராஜாவின் இசையில் தங்களைப் பாதித்தது சந்தேகமே இல்லாமல் காதல் பாடல்கள் தான் என்று அவரின் காதல் வரிகளை ட்வீட் செய்து ராஜாவின் இசையைப் புகழ்ந்திருக்கின்றனர் ரசிகர்கள்.

அவர்களின் ட்வீட்டுகளில் இருந்து ஒருசிலவற்றை இங்கே காணலாம்.

காதலின் தீபம் ஒன்று

காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்" தம்பிக்கு எந்த ஊரு படத்தின் பிரபலமான பாடலைப் போட்டு இளையராஜாவின் இசையைக் கொண்டாடி இருக்கிறார் ராண்டி.

செண்பகமே செண்பகமே

என்னோட பாட்டு சத்தம் தேடும் உன்ன பின்னாலே, எப்போ நீ என்னை தொட்டு சேரப்போற முன்னாலே..செண்பகமே செண்பகமே என்று எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் பாடல் வரிகளை ட்வீட் செய்து மகிழ்ந்திருக்கிறார் கீச்சு கீச்சு.

இந்தத் தேகம் மறைந்தாலும்

"இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்"- இந்த வரிக்கு மிகவும் பொருத்தமானவர் இவர் மட்டுமே" என்று இளையராஜாவைப் பாராட்டியிருக்கிறார் தனலட்சுமி.

சோகங்கள் எனக்கு நெஞ்சோடு இருக்கு

சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கு சிரிக்காத நாளில்லையே" என்று புதுப்புது அர்த்தங்கள் படத்தின் அர்த்தமுள்ள பாடல் வரிகளைப் போட்டு இளையராஜாவின் இசையை நினைவு கூர்ந்திருக்கிறார் கெட்டவன் நல்லவன்.

உனக்கே உயிரானேன் எந்நாளும்

"உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே, நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சன்னிதி" மூன்றாம் பிறை படத்தில் வரும் அர்த்தமுள்ள பாடல் வரிகளை ட்வீட் செய்து ராஜாவை நினைவு கூர்ந்திருக்கிறார் ஸ்டைலிஷ் தமிழச்சி.

நான் கேட்கும் பதில் இன்று

"நான் கேட்கும் பதில் இன்று வாராதா... நான் தூங்க மடி ஒன்று தாராதா" காதலுக்கு மரியாதை படத்தில் இடம்பெறும் என்னைத் தாலாட்ட வருவாளா பாடலின் வரிகளை போஸ்ட் செய்து ராஜாவின் இசையைப் பாராட்டி இருக்கிறார் ட்வீட் புக்.

தென்றல் வந்து தீண்டும் போது...

"தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலே" என்று அவதாரம் படத்தின் மிகச்சிறந்த பாடல் வரிகளை நினைவு கூர்ந்திருக்கிறார் இறைவடி.

சுந்தரி கண்ணால் ஒரு சேதி

சுந்தரி கண்ணால் ஒரு சேதி. சொல்லடி இந்நாள் ஒரு தேதி " தளபதி படத்தின் எவர்க்ரீன் பாடல் வரிகளை நினைவு கூர்ந்து ராஜாவின் இசையை பாராட்டியிருக்கிறார் ஜானி செபா சிங்.

English summary
Music Composer Ilaiyaraaja Completed 40 Years in Film Industry - Fans Twitter Comments.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil