»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சிம்பொனிக்காக லண்டன் சென்ற இளையராஜா பின்னர் ஹே ராம் படத்தின் சில காட்சிகளுக்கான இசையை ஹங்கேரியில்வைத்து ரெக்கார்டிங் செய்தார்.

தற்போது ஆங்கிலப் படமொன்றுக்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தின் இசை முழுவதையும்ஹங்கேரியிலேயே வைத்து முடிக்க முடிவு செய்துள்ளார் இளையராஜா.

இதற்காக இளையராஜாவும், அவரது மகன் கார்த்திக் ராஜாவும் விரைவில் ஹங்கேரி செல்கின்றனர்.

கலைப்புலி படத்தில் யுவன் சங்கர் ராஜா

கலைப்புலி தாணு இயக்கும் அடுத்த படத்திற்கு இளையராஜாவின் இளைய வாரிசு யுவன் சங்கர் ராஜாஇசையமைக்கவுள்ளார். விரைவில் தொடங்கவுள்ள இந்தப் படத்தை இயக்கவிருப்பவர் டைரக்டர் ரத்னகுமார்.

கமல்ஹாசன் மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ள ஆளவந்தான் படம் வெளியான பிறகு இந்தப் படத்தின்படப்பிடிப்பு துவங்கும். இதற்கிடையே ஆளவந்தான் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என பேச்சுஅடிபடுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil