»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

லேட்டஸ்ட் தமிழ் சினிமா ஹிட் பாடல்கள் எது தெரியுமா? என் மன வானில் என்கிறது கேசட் வட்டாரம். இந்தப் படத்தில்தேவகானம் படைத்திருக்கிறார் நம் இசைஞானி இளையராஜா.

பாபாவை தூக்கி சாப்பிட்டு விட்டதாம் என் மன வானில் பாட்டு கேசட்டுகள். படு ஸ்பீடாக விற்றுத் தீர்ந்துகொண்டிருக்கிறதாம். கடந்த வாரம் வரை யூத் பட கேசட்டுகள்தான் அதி பயங்கரமாக விற்றுக் கொண்டிருந்தன.

அதை தூக்கி சாப்பிட்டது பாபா. இப்போது பாபாவையே தூக்கி சாப்பிட்டு விட்டதாம் என் மன வானில்.

இளையராஜாவின் இசையில் அட்டகாசமான பாடல்களுடன் வந்துள்ள இந்தப் படத்தில், கமல்ஹாசனின் மகள்சுருதியும் ஒரு பாட்டுப் பாடியுள்ளார். ஜேசுதாஸுடன் இணைந்து ரோட்டோரப் பாட்டுச் சத்தம் கேட்குதா என்றபாடலைப் பாடியுள்ளார்.

காசி படத்தை இயக்கிய மலையாளத்து வினயன் டைரக்ஷனில் உருவாகியிருக்கும் என் மன வானில் படத்தில்மலையாளத்து ஜெயசூர்யா மற்றும் காவ்யா மாதவன் நடித்துள்ளனர். வடிவேலு கூனி வேடத்தில் நடித்துக்கலக்கியுள்ளார்.

ரஹ்மானின் பாட்டுக்கள் எப்போதுமே லேட் பிக்கப் என்றாலும் கூட, பாபா கேசட்டுகள் முதலில் நன்றாக விற்றுத்தீர்ந்ததாகவும், ஆனால், இரண்டே வாரத்தில் டல் ஆகி விட்டதாகவும் ஆடியோ கடைக்காரக்கள் கூறுகிறார்கள்.

பழனிபாரதி, முத்துலிங்கம், மேத்தா ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். ஹரிஹரன், சாதன சர்க்கம், மனோ, சுரேந்தர்,கார்த்திக், ஹரீஷ் ராஜவேந்தர், சுஜாதா, யேசுதாஸ், பவதாரினி, நெப்போலியன், சுவர்ணலதா, பிஜூ, சுருதி கமலஹாசன் என பலகுரல்களில் பாடல்கள் அட்டகாசமாக வந்துள்ளன. மற்றும் இளையராஜாவும் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

என் மன வானில் மூலம் இளையராஜா தனது அடுத்த ரவுண்டை ஆரம்பிக்கிறார். வாங்க ராஜா...

Please Wait while comments are loading...