twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல்முறையாக மராத்தி படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா!

    By Shankar
    |

    Ilayaraja
    உலகின் மிக சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜா, இதுவரை 950-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவருடைய இசையில், 4,500 பாடல்கள் வெளிவந்துள்ளன.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 6 மொழி படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். இப்போது முதன்முதலாக அவர் ஒரு மராத்தி படத்துக்கு இசையமைக்கிறார்.

    'ஹலோ ஜெய்ஹிந்த்'

    அந்த படத்தின் பெயர், 'ஹலோ ஜெய்ஹிந்த்.' இந்த படத்தை கஜேந்திரா அஹைர் டைரக்டு செய்கிறார். நடிகை திருப்தி போயிர் தயாரிக்கிறார்.

    மூத்த பாடகர்கள் சுக்விந்தர் சிங், ஹரிஹரன், கைலாஷ் கேர், அனில் ஷின்டே ஆகியோர் இளையராஜா இசையில், மராத்தி பாடல்களை பாடியிருக்கிறார்கள். இந்த பாடல்கள் மும்பையிலும், சென்னையிலும் பதிவு செய்யப்பட்டன.

    மராத்தி படத்துக்கு இளையராஜா இசையமைப்பது பற்றி அந்த படத்தின் டைரக்டர் கஜேந்திரா அஹைர் கூறுகையில், "ஹலோ ஜெய்ஹிந்த், மும்பையில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட கதை. எங்கள் படத்துக்கு இளையராஜா இசையமைக்க சம்மதித்தது, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர், மிக எளிமையானவர். படத்தின் கதையைkd கேட்ட அடுத்த நிமிடமே அவர் இசையமைக்க சம்மதித்து விட்டார்.

    இளையராஜா இசையமைப்பதால், எங்கள் படத்துக்கு தனி மரியாதை கிடைத்துள்ளது. படத்தின் தரம் உயர்ந்திருக்கிறது. இது எங்களுக்குப் பெருமையாக உள்ளது,'' என்றார்.

    கலைத்துறை சாதனையாளர்களுக்கு மராட்டிய அரசு வழங்கும் உயரிய லதா மங்கேஷ்கர் விருதினைப் பெற்றவர் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    For the very first time legendary composer Ilayaraja is composing for a Marathi movie. The movie titled 'Hello Jai Hind', is directed by Gajendra Ahire for actress-producer Trupti Bhoir, while famous art director Nitin Desai is set to work in the Marathi film as well.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X