twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசைப் பல்கலைக்கழகம்: நிறைவேறுமா இளையராஜாவின் கோரிக்கை?

    |

    Ilayaraja
    இசைஞானி இளையராஜா பொதுவாக அரசிடம் கோரிக்கை எதுவும் வைக்காதவர். அறப்பணி உதவிகளென்றால் கூட தானே தன் சொந்த பணத்தில் செய்துவிடுபவர்.

    ஆனால், அவர் அரசுக்கு வைத்த ஒர் கோரிக்கை, இசைக்கென்று தனி பல்கலைக்கழகம் வேண்டும் என்பதுதான்.

    தனது இந்தக் கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார் இளையராஜா.

    சென்னை எம்ஓபி வைஷ்ணவா கல்லூரில் நேற்று மாணவிகள் நடத்திய பொங்கல் திருவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்தார் இசைஞானி. அப்போது நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

    இந்த நிகழ்ச்சிக்கு தனது ஆர்மோனியத்தையும் எடுத்து வந்தார் ராஜா.

    மாணவிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் ஆர்வமுடன் கேட்ட கேள்விகளுக்கு அதே உற்சாகத்துடன் அவர் பதிலளித்தார். அவர் கூறியதிலிருந்து...

    இசையும் காற்றைப் போலத்தான்.​ எப்போதும் நம்முடன் கலந்திருக்கிறது.​ காற்றை காற்றிலிருந்து பிரிக்க முடியுமா?​ 1968ம் ஆண்டு சென்னை வந்ததிலிருந்து இன்று வரை நெருங்கிய நண்பன் என யாரும் இல்லை.​ ஆர்மோனியப் பெட்டிதான் என் நெருங்கிய,​​ உயிர் நண்பன்.​ இந்தப் பெட்டியோடுதான் நான் பேசி வருகிறேன்.​

    எப்பொழுதும் ஆர்மோனியப் பெட்டிதான் என் கூடவே வருகிறது.​ 'பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்...' என்ற பாடல் வரி கிடைக்க அதற்கு உருவம் கிடைத்த நேரம் அதிகாலை 3 மணி.

    தன் 16 வயதில் அனைத்தையும் துறந்து,​​ யாரும் இல்லாமல் வேறு உலகத்துக்கு போனவர்.​ அனைத்தையும் துறந்து,​​ ​ 'தண்ணீரில் இறங்கி குளிக்கும்போது எந்த தண்ணீர் வந்து இந்த உடலை சுத்தப்படுத்தி விடப்போகிறது.​ இந்த உடலுக்கு குலம்,​​ ஜாதி என என்ன இருக்கிறது' என நினைத்தவர்.​ ரிஷிதான் என்னைப் பிடித்து இயங்க வைக்கிறார்.​ உடலில் இருக்கும் ஒவ்வொரு புலன்களுக்கும் இன்பம் இருக்கிறது.​ அறிவின் இன்பம் எது என்பதை அறிந்தவர் ரமண மகரிஷி.​

    'அன்னக்கிளி'யின் பாடல்கள் ஹிட்டாகும் என எனக்குத் தெரியாது.​ அதற்கு இறைவன்தான் காரணம்.

    இன்றைக்கு பாடல் கேட்டு வருபவர்கள், 'அந்த படத்தில் வந்தது மாதிரி.​.. இந்த பாடல் வேண்டும்' என்று குறிப்பிட்டுதான் கேட்கிறார்கள்.​ 'புதுமையாக வேண்டும்' என யாரும் கேட்பதில்லை.​ 877 படங்கள் முடித்தாகி விட்டது. இப்போது​ எந்த இயக்குனரும் என்னிடம் புதுமையை நோக்கி வரவில்லை.

    மதுரை வைகை அணை கட்டுகையில் கூலி வேலை செய்தபோது பாடிய பாடல்களிலிருந்து,​​ தேவாரம் பள்ளியில் பாடியதில்...அண்ணன் பாவலருடன் திருவெறும்பூரில் பாடிய மாநாட்டு பாடல்...​ என வாழ்க்கையில் ஆயிரம் விஷயங்கள்.​

    சென்னை வரும் போது சங்கீத பாஷைகள் எதுவும் தெரியாது.​ இப்போதும் எதுவும் தெரியாது.​ இசையைப் பற்றி தெரியாமல் இருப்பதால்தான் இன்றும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

    இசை பல்கலைக்கழகம் உருவாகும்...

    இந்திய இசையின் உருவம் வேறு.​ மேற்கத்திய இசையின் உருவம் வேறு.​ உலகத்தில் காலம்தான் பிரமாண்டமானது என சொல்லுவேன்.​ ஒரு நொடியையும்,​​ மற்றொரு நொடியையும் பிரிக்க முடியாத அளவு காலம்தான் சேர்த்து வைக்கிறது.​

    சில குறிப்பிட்ட இசைகளால் எல்லாம் ​ முடிந்து விட்டதாக அர்த்தமில்லை.

    சில காலக் கட்டங்களில் உலக இசை மேதைகளை பற்றி தெரிந்துகொள்ள அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு சென்றிருக்கிறேன்.​ சுற்றிப் பார்த்திருக்கிறேன்.​ இசை மேதை பீத்தோவனின் பியானோவை தொட்டுப் பார்த்திருக்கிறேன்.​ அவர்கள் அந்த அளவு பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.

    ஆனால் நம் முன்னோர்களின் இசைக் கருவிகள் எங்கே போயின?​ இது பற்றி முதல்வரிடமும் பேசியிருக்கிறேன்.​ இசைப் பல்கலைக்கழகம் பற்றியும் பேசியிருக்கிறோம்.​ அந்த அமைப்பு உருவாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இளைஞர்களுக்கு என்னிடமிருப்பதைதக் தரவே விரும்புகிறேன். இருப்பதைத் தந்து விட்டுப் போக வேண்டும் என்பதே என் விருப்பம் என்றார் இளையராஜா.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X