»   »  மீண்டும் இளையராஜா-பாரதிராஜா

மீண்டும் இளையராஜா-பாரதிராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

இசைஞானி இளையராஜாவும் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் மீண்டும் இணையும் வாய்ப்புகள் கூடி வந்துள்ளன.

இந்த இருவரும் (கூடவே கவியரசு வைரமுத்துவும்) இணைந்து தந்த படங்களும், பாடல்களும் ரசிகர்களை மெஸ்மரிஸ மயக்கத்தில் ஆழ்த்தியவை.

ஆனால், காலத்தின் கோலம் இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணித்தனர். வைரமுத்து மட்டும் பாரதிராஜவோடு பயணித்தார்.

ரகுமானை வைத்து பாரதிராஜா தந்த பாடல்கள் அப்போதைக்கு நன்றாக இருந்தனவே தவிர, காலத்தை தாண்டி நிலைக்கவில்ைல.

ராஜாக்கள் கூட்டணி தந்த அந்த 70களும் 80களும் தான் இன்னும் நினைவுகளை நனைய வைத்துக் கொண்டிருக்கின்றன.

16 வயதினிலேவில் ஆரம்பித்த இந்தக் கூட்டணி நாடோடித் தென்றல் வரை நீடித்தது. தமிழ் மண்ணை பாரதிராஜா படம் பிடித்துக் காட்ட அதற்கு தமிழ் வாசனை கொண்ட இசையால் உயிர் தந்தார் இளையராஜா.

யார் கண் பட்டதோ, அந்த பொன்னான நாட்கள் கடந்த காலங்கள் ஆயிப் போயின.

இளையராஜாவை விட்டுப் பிரிந்த பாரதிராஜா தந்தது 8 தோல்விப் படங்கள் தான். தப்பியது கிழக்குச் சீமையிலே மட்டுமே.

இப்போது இந்தக் கூட்டணி மீண்டும் சேர ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது.

பாரதிராஜா தனது கனவுப் படம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் குற்றப் பரம்பரை படத்துக்கு இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என்று ஒரு நிகழ்ச்சியில் பேச, நான் ரெடி என்று பச்சைக் கொடி காட்டி பேட்டி தந்திருக்கிறார் இளையராஜா.

இதனால் மனம் ெநகிழ்ந்து போயிருக்கிறார் பாரதிராஜா.

குற்றப் பரம்பரை வெறும் படமல்ல. அது ஒரு காவியம். தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய காலகட்டத்தை அச்சு அசலாய் சொல்லப் போகும் படம். இந்தப் படத்துக்கு இளையராஜாவின் இசை தான் முழுமை தர முடியும் என்கிறார் பாரதிராஜா.

இந்தக் கூட்டணியில் வைரமுத்துவும் சேருவாரா என்று கேட்டால், அமைதியையே பதிலாய் தருகிறார் பாரதிராஜா.

இசைஞானியே பழைய கோபத்தை கொஞ்சம் மறக்கக் கூடாதா...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil