»   »  துபாயில் இளையராஜா!

துபாயில் இளையராஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
இசைஞானி இளையராஜா துபாயில் முதல் முறையாக இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

கலைஞர் டிவி சார்பில் துபாயில் வருகிற 16ம் தேதி இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜா இதில் பங்கேற்று இசை மழை பொழியவுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவுடன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ, திப்பு, மது பாலகிருஷ்ணன், விஜய் ஏசுதாஸ், சித்ரா, சாதனா சர்கம், ஷ்ரேயா கோசல், பவதாரணி மற்றும் மஞ்சரி ஆகியோரும் கலந்து கொண்டு பாடவுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த கூல் புரடக்சன்ஸ் நிறுவனமும், கலைஞர் டிவியுடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனவாம்.

இசைஞானியின் இசை மழையில் நனைய விரும்புவோர், 6012 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்யலாம். அல்லது http://www.koolproductions.org/ என்ற இணையதளத்தைத் தொடர்பு கொண்டு டிக்கெட் விவரங்களை அறியலாம்.

Read more about: illaiyaraja

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil