For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஸ்பெஷல்ஸ்

  By Staff
  |

  இசைஞானி இளையராஜாவின் இசை ஆல்பமான திருவாசகம் தயாராகி விட்டது. தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதிவெளியிடப்படவுள்ளது.

  சைவக் குறவர்கள் என்று போற்றப்படும் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தை, சிம்ஃபொனி இசை வடிவத்தில்கொண்டு வந்துள்ளார் இளையராஜா.

  இயக்குனர் பாரதிராஜாவை தன் அருகே வைத்துக் கொண்டு நிருபர்களைச் சந்தித்த இளையராஜா கூறியதாவது:

  திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார். திருவாசகத்தை சிம்ஃபொனி இசை வடிவில் கொண்டு வர எனக்கு நான்குஆண்டுகள் பிடித்தது. அதைப் பதிவு செய்ய 12 நாட்கள் ஆனது. தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம்தேதி திருவாசகம் ஆல்பம்வெளியிடப்படும்.

  என்னுடைய இந்தப் பணியில் 200 இசைக் கலைஞர்களும் பங்கெடுத்தனர். திருவாசக இசையும், அதைக் கொடுத்துள்ள விதமும் நிச்சயம்உங்களை வேறு உலகிற்கு இட்டுச் செல்லும்.

  இதை வணிக நோக்கில் நான் செய்யவில்லை. எனது ஆன்ம திருப்திக்காகவே இப் பணியை மிகுந்த வலிகளோடு செய்து முடித்துள்ளேன்.

  இது ஒரு சாதாரண பணி அல்ல, இறைவன் இட்ட கட்டளையை நான் நிறைவேற்றியுள்ளேன். அது மட்டுமல்ல, இது இளையதலைறையினருக்காக நான் செய்துள்ள கடமை. அதற்காக இளைஞர்கள் தடம் மாறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லமாட்டேன். அவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.

  ஆனால், தமிழ் மொழியின் கலாச்சாரம்,செறிவு, வளமை, சிறப்பு குறித்து இளைய தலைறையினருக்கு சரியாகத் தெரியவில்லை. இது எனக்குநிறைய வருத்தத்தைத் தருகிறது. இதுபோன்ற முயற்சிகள் அவர்களுக்கு தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துக் கூறும் என்றால் எனக்கு மெத்தமகிழ்ச்சி.

  நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று கொண்டிருந்தபோது, என்னுடன் வந்த நண்பர் ஒருவர்,திருவாசகத்தை உச்சரித்தார். அதைக் கேட்டதும் உருகி நின்றேன்.

  எனது இசைத் திறமையை நிரூபிக்க இதை நான் இயற்றவில்லை. திருவாசகம் நமது பொக்கிஷம் என்பதை இளைஞர்களுக்கு உணர்த்தவேஇந்த பணியை செய்தேன். ஆகவே, இளைய தலைறையினருக்கு இதை காணிக்கையாக்குகிறேன் என்றார் இசைஞானி.

  திருவாசகம் ஆல்பத்தில் உள்ள அனைத்துப் பாடல்களையும் இளையராஜாவே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  திருவாசகம் ஆல்பத்தை உருவாக்க அரும் முயற்சி எடுத்த தமிழ் மையம் அமைப்பைச் சேர்ந்த வின்சென்ட் சின்னதுரை கூறுகையில்,

  சென்னையில் திருவாசகம் ஆல்பம் வெளியிட்ட பின்னர் சிதம்பரம், திருச்சி, தஞ்சாவூர், கோவை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில்மற்றும் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, துபாய், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில்தேர்ந்தெடுத்த நகரங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி அங்கும் இந்த ஆல்பத்தை வெளியிட உள்ளோம் என்றார்.

  இளையராஜாவின் திருவாசகம் ஆல்பத்தை உருவாக்கும் பணியில், அவருக்கு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த புடாபெஸ்ட் சிம்ஃபொனிஆர்கெஸ்ட்ரா குழுவினர் பேருதவியாக இருந்தனர். அக் குழுவைச் சேர்ந்த 140 இசைக் கலைஞர்கள், அமெரிக்காவைச் சேர்ந்த நாடகஇசைக் கலைஞர் ஸ்டீபன் ஸ்வார்ட்ஸ், கிராமி விருதை ஐந்து முறை பெற்றவரான ரிச்சர்ட் கிங் உள்ளிட்டோரும் ராஜாவுக்கு உறுதுணையாகஇருந்துள்ளனர்.

  மும்பை, சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், புடாபெஸ்ட், நியூயார்க் ஆகிய நகரங்களைச் சேர்ந்த 200 இசைக் கலைஞர்கள், வாத்தியகலைஞர்கள் ராஜாவுடன் இசையமைப்பில் பங்கேற்றுள்ளனர்.

  இந்து மத இலக்கியமான திருவாசகத்தை சிம்ஃபொனி வடிவில் கொண்டு வர முன் முயற்சி எடுத்தவர் தமிழ் மையம் அமைப்பின்நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான கிறிஸ்தவப் பாதியார் ஜெகத் காஸ்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

  இசையும், அற நூல்களும் மதங்கள், மொழிகளைக் கடந்தது என்பதை இளையராஜாவின் திருவாசகம் நிரூபித்துவிட்டது.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X